Yahya

நமது தலைவர்களின் தியாகம் கண்டு புல்லரிக்கின்றது..!

பாராளுமன்றத்தில் சென்ற சனிக்கிழமை உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தச்)
சட்டமூலம் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனை ஹக்கீம் அவர்கள் கடுமையாக எதிர்ததோடு, தமது முன்மொழிவுகளை இணைத்துக் கொள்ளுமாறும் இல்லேயேல் எதிர்த்து வாக்களிப்பேன் என்றும் எச்சரிக்கை வேறு விட்டிருந்தார்.

இதனையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள்,இந்த சட்டமூலத்தில் குறைபாடுகள் இருக்கின்றபோதிலும்,தற்போது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் காலம்தாழ்த்தப்பட்டு விடக் கூடாது என்ற காரணத்தினால். குறைபாடுகளை பின்னர் கலந்து பேசுவோம் இப்போதைக்கு சட்டமூலத்தினை ஆதரியுங்கள் என்றார்.

அதன் பின் ஹக்கீம் அவர்களின் இருப்பிடத்துக்கு சென்ற பிரதமர் ரணில் அவர்கள் கெஞ்சாத குறையாக ஹக்கீமிடம் வாதாடுவதை பலர் கவணித் கொன்டிருந்தார்கள்

அந்த நேரம் ஹக்கீம் கதிரையில் அமர்ந்திருக்க பிரதமர் அவர் பக்கத்தில் நின்றவாரே இந்த பிரேரணைக்கு ஆதரவு தெறிவிக்குமாறு வேண்டியபோதும், ஹக்கீம் அவர்கள் கைகளைக்காட்டி என்னால் முடியாது என்று மறுத்துவிட்டாராம்

இதே போன்றுதான் ரிசாத் அமைச்சரிடமும் இதற்கு  ஆதரவாக வாக்களிக்குமாறு பிரதமர் வேண்டியபோதும், அவரும் வாக்களிக்க மறுத்தது மட்டுமல்லாமல் மற்றவர்களையும் வாக்களிக்க வேண்டாம் என்று சைகை செய்தாராம்.

(இதனையெல்லாம் பார்க்கும் போது நமது தலைவர்கள் எந்தளவு சமூகப்பற்றோடு நடந்து கொள்கின்றார்கள் என்பதை நினைத்து நமது மேலெல்லாம் புல்லரிக்கின்றது)

இருந்தாலும், இவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் சட்டமூலத்தின்  முதலாவது வாக்கெடுப்புக்கு ஆதரவாக 144 வாக்குகளும் எதிராக 56வாக்குகளும் இடப்பட்டு, 88 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

அதன் பின்னும் பிரதமர் ஹக்கீமிடமும், ரிசாட்டிடமும் சென்று அடுத்த கட்ட வாக்களிப்பில் இதற்கு சார்பாக வாக்களிக்குமாறு வேண்டினாராம்.(இதல்லாம் தேர்தல் நாடகங்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவேண்டும்).
அதன் பின் இரண்டாவது வாக்கெடுப்பும் நடத்தப்பட்டு அதுவும் நிறைவேற்றப்பட்டது

அதன் பின்னும் பிரதமர் ரணில் அவர்கள் ஹக்கீம் அவர்களை பின்வரிசை ஆசனத்துக்கு அழைத்துச்சென்று இதற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு வேண்டியபோதும்  கை சைகைமூலம் முடியாது என்று மறுத்துவிட்டாராம், அதே போன்றுதான் ரிசாட் அவர்களும் நடந்துகொண்டாராம்.

இந்த நிலையில் மூன்றாவதும் இறுதியுமான  வாக்கெடுப்பு நடத்தப்பட்டு சட்டமூலத்துக்கு ஆதரவாக 137வாக்குகளும் எதிராக 49வாக்குகளும் இடப்பட்டு 88 மேலதிக வாக்குகளால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

இப்போது விடயத்துக்கு வருவோம்,

இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக இவர்கள் வாக்களிக்காது விட்டாலும்,இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படும் என்று நன்றாகவே  அறிந்திருந்த பிரதமர் ரணில் அவர்கள், வழமைக்கு மாறாக இவர்ககளின் இருப்பிடம் தேடிச்சென்று வாக்களிக்குமாறு  கெஞ்சியது ஏன்?

தாங்கள் ஆதரித்து வாக்களிக்காது விட்டாலும் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படும் என்று அறிந்திருந்தும்,இதற்கு ஆதரவாக கடைசிவரையும் நாங்கள் வாக்களிக்கமாட்டோம் என்று இரு முஸ்லிம் தலைவர்களும் பிடிவாதம் பிடித்ததன் நோக்கம் என்ன?

கடந்த மாகாணசபை தேர்தல் சட்டதிருத்தம் வந்தபோது காட்டாத ஆர்வத்தை,இந்த சட்ட திருத்தத்திற்கு காட்டியது ஏன்?  

இப்படியான நிலையில் அன்று அந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு நமது தலைவர்கள் சொன்ன காரணம் என்ன தெறியுமா? நாங்கள் வாக்களிக்காது விட்டாலும் சட்ட திருத்தம் நிறைவேறிவிடும், அதனால்தான் நாங்கள் ஆதரித்து வாக்களித்தோம்,அதேநேரம் வெற்றியடைய போகும் சட்டமூலத்துக்கு எதிராக நாங்கள் வாக்களித்தால் அரசாங்கம் கவிழ்ந்து விடுமா? என்று கேள்விவேறு கேட்டார்கள்

இப்படிக் கேள்வி கேட்ட தலைவர்கள், வெற்றியடையப்போகும்  இந்த சட்டமூலத்துக்கு மட்டும் அடம்பிடித்தது ஏன்?

எதற்கும் அசராத பிரதமர் ரணில் அவர்கள், சாதாரணமாகவே வெற்றியடையப்போகும் இந்த சட்டமூலத்தை ஆதரிக்குமாறு, இவர்களின் இருப்பிடம் சென்று மன்றாடியது ஏன்?

இதுவெல்லாம் தேர்தல்கால நாடகம் என்பது சிறுபிள்ளைக்கும் விளங்கும் காரணம்,ஹக்கீமும் ரணிலும் கூட்டாக யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்றார்கள்,ஆதலால் இந்த நேரத்தில்  ஹக்கீமின் இமேஜ் ஏறினால் அது தனது கட்சிக்கு சார்பாக அமையும் என்பதனால்தான் இந்த நாடகத்தை அரங்கேற்றி விட்டு பார்த்தீர்களா ஹக்கீம் எப்படியெல்லாம் சமூகத்துக்காக வாதாடுகின்றார் பாருங்கள் என்று கூறுவதற்கும், பிரதமர் எவ்வளவோ கெஞ்சியும் ஹக்கீம் விட்டுக்கொடுக்கவில்லை என்று கூறி முஸ்லிமக்களின் வாக்குகளைக் கொள்ளையடிப்பதற்கு போட்ட திட்டமே இதுவாகும்.

அதனை அறிந்து கொண்ட அமைச்சர் ரிசாட் அவர்களும்(சாய்ந்தமருது விடயத்தில் நடந்து கொண்டதுபோல, ஹக்கீம் பி.தேசசபை கொடுப்பதற்கு முந்தி, தனது நண்பன் பைசர் மூலமாக நான் பெற்றுத்தறுவேன் என்று கூறியது போல)தானும் முஸ்லிம் சமூகத்தின் மீது கரிசணை கொண்டவர்தான் என்று காட்டிக்கொள்வதற்காக, தனது பங்குக்கு அவரும் இந்த நாடகத்தில்  பங்குகொண்டு,எனது கட்சியும் இதற்கு உடன்படாது என்று கூறியதே  உண்மையாகும்

முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக எவ்வளவோ சட்டங்கள் பாராளுமன்றத்திலே நிறைவேற்றப்பட்டு விட்டது, அந்த நேரமெல்லாம் அதற்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு நாங்கள் தவறு செய்துவிட்டோம் என்று கூவித்தெறியும் இந்த தலைவர்கள்,இன்று இப்படி நடந்து கொள்வதை யாராவது ஏற்றுக்கொள்வார்களா?

ஆகவே,இந்த விடயத்தில் முஸ்லம் மக்கள் வழமைபோன்று உணர்ச்சிக்கும், கோசத்துக்கும் அடிமைப்பட்டு இவர்களின் நாடகத்துக்கு பழியாகாமல் இருப்பார்களா?என்பது கேள்விக்குறிதான்

இருந்தாலும் இந்த தலைவர்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளவேண்டும்.அப்பாவி மக்களை வேண்டுமென்றால் நீங்கள் ஏமாற்றலாம், ஆனால் படைத்த இறைவனை ஒருகாலும் ஏமாற்ற முடியாது என்பதை நீங்கள்  புரிந்து கொள்ளவேண்டும்.

சந்தர்ப்பத்துக்கு ஏற்றமாதிரி காரணங்களைக் கூறிக்கொண்டு,நீங்கள் நடத்தும் நாடகத்தை சமூகம் வேண்டுமென்றால்  அறியாமல் இருக்கலாம்,ஆனால் படைத்த  இறைவன் இந்த நாடகங்களை அறிந்து கொண்டுதான் இருக்கின்றான் என்பதை.

தலைவர்களே..! உங்களால் இழந்தது அதிகம், பெற்றது சிறிது என்பதை மறந்துவிடாதீர்கள்...!

எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை..
நமது தலைவர்களின் தியாகம் கண்டு புல்லரிக்கின்றது..!  நமது தலைவர்களின் தியாகம் கண்டு புல்லரிக்கின்றது..! Reviewed by Madawala News on 12/12/2017 11:55:00 AM Rating: 5