Yahya

அமைச்சர் ஹலீமுக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு ..


அமைச்சர் ஹலீம் அவர்களுக்கு எதிராக அங்கும்புர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளதாக
குறித்த முறைபாட்டை செய்த முறைப்பாட்டாளர் எமது செய்தி சேவைக்கு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட குறித்த முறைப்பாட்டை பதிவு செய்த நுஸ்கி நசீர்,

கல்ஹின்னை படகொல்லா தெனிய பிரதேசத்தில் மரண வீடு ஒன்றுக்கு சென்றிருந்த முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால் துறை அமைச்சர் கௌரவ எம்.எச். ஹலீம் மரண வீட்டிலே குவிந்திருந்த மக்கள் முன்னிலையில் ஐக்கிய தேசிய கட்சி கல்ஹின்னை அமைப்பாளரும் தனது  தந்தையுமாகிய அல்ஹாஜ் எம்..எம் நஸீர் அவர்களிடத்தில் தனது  மனைவி மற்றும் ஊர் மக்கள் முன்னிலையில் மிகக் கடுமையான வார்த்தைகளால் திட்டியதாகவும் தனக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளாகவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தான் அங்கும்புர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அமைச்சர் ஹலீமுக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு ..  அமைச்சர் ஹலீமுக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு .. Reviewed by Madawala News on 12/29/2017 09:05:00 PM Rating: 5