Yahya

டிரம்பிம் அறிவிப்பை மீள பெறவேண்டும் ; ஐ நா பொது சபை ஒப்புதல் ..

அமெரிக்க அதிபர் டிரம்பின் இஸ்ரேல் ஆதரவு தீர்மானத்தை அவர் திரும்ப பெற வேண்டும் என
ஐக்கிய நாடுகள் பொது சபை ஒப்புதல் அளித்துள்ளது.

ஜெருசலேமை இஸ்ரேலிய தலைநகராக ஒரு தலைபட்சமாக அமேரிக்கா அறிவித்ததை கண்டித்து அந்த அறிவிப்பை தடை செய்யும் பிரேரணை ஐநாவின் பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்பட்டது.

பாதுகாப்பு சபையில் இருக்கும் 15 நாடுகளில் 14 நாடுகள் இந்த கண்டன பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன

அமேரிக்கா மட்டும் எதிர்த்து வாக்களித்தது மட்டுமல்லாது வீட்டோவை பாவித்து பிரேரணையை தடை செய்தது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் இஸ்ரேல் ஆதரவு தீர்மானத்தை அவர் திரும்ப பெற வேண்டும் என்ற தீர்மானத்திற்கு ஐக்கிய நாடுகாள் பொது சபை ஒப்புதல் அளித்துள்ளது.


இந்த அமர்வின்போது அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவாக 9 நாடுகளும் எதிராக 128 நாடுகளும் வாக்களித்துள்ளன.இதில் 35 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை, எனினும் பெரும்பான்மை வாக்குகளால் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு அறிவிப்பு கண்டிக்கப்பட்டுள்ளது
டிரம்பிம் அறிவிப்பை மீள பெறவேண்டும் ; ஐ நா பொது சபை ஒப்புதல் ..  டிரம்பிம் அறிவிப்பை மீள பெறவேண்டும் ; ஐ நா பொது சபை ஒப்புதல் .. Reviewed by Madawala News on 12/21/2017 11:26:00 PM Rating: 5