Yahya

யார் வெற்றித் தலைமைகள்?



தான் வாழும் பிரதேசம் தொடக்கம் தேசம் வரை, தான் தலைவனாக இருக்க வேண்டும் அதனை மக்கள் ஏற்று
ஏற்றுகொள்ள வேண்டும். இதுவே இன்றைய அரசியல் கட்சி தலைமைகளின் "தாரக மந்திரம்". அதற்காக என்ன விலை கொடுக்கவும் அரசியல் தலைமைகள் தயாராகவே இருக்கிறார்கள். இந்த இடத்திலிருந்தே முஸ்லிம் அரசியல் மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இப்படியான அரசியல் தலைமைகளால், இலங்கை முஸ்லிங்களின் நின்மதிக்காகவும் சந்தோசத்திற்காகவும் முன்னின்று உழைக்க முடியும் என சிந்திக்கும் மக்கள் மாத்திரமே இவர்களை வெற்றி தலைவர்களாக ஏற்று கொண்டிருக்கிறார்கள். (வெற்றி தலைமை என பேசுகிறவர்கள் பல்வேறு வகையினர் இருந்தாலும், வேறு எந்த நோக்கமுமின்றி நல்லெண்ணத்துடன் இவர் தான் உண்மையாக வெற்றி தலைமை என்று இருப்பவர்களை மாத்திரமே இங்கே விழித்திருக்கிறேன்)

உலகில் சிறுபான்மையாக முஸ்லிம் வாழும் நாடுகளை ஒப்பிட்டளவில் இலங்கையுடன் நோக்கும் போது இலங்கை முஸ்லிங்கள் மிகவும் பாக்கியம் பெற்றவர்கள் என்றே கூற வேண்டும். இந்த நாட்டில் இரண்டாவது சிறுபான்மையாக வாழும் முஸ்லிங்களுக்கு இருக்கும் சலுகைகளை பட்டியலிட்டு ஏனைய சிறுபான்மை நாடுகளுடன் ஒப்பிட்டு பார்த்து கொண்டால் யாவரும் விளங்கி கொள்ள முடியும்.

மதச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், வாழும் உரிமை ...etc என எமது வாழ்க்கைக்கு தேவையான எல்லா சலுகைகளையும் உள்ளடக்கியதாகவே இலங்கை சட்ட யாப்பு வரையப்பட்டுள்ளது.

இவைகள் இல்லை என்றால் இரண்டாம் சிறுபான்மையாக இந்நாட்டில் வாழும் எங்களின் நிலையை சற்று சிந்தித்து பாருங்கள்!

ரோஹிங்கியா தொடக்கம் காஷ்மீர் வரை உங்களின் சிந்தனையை விசாலமாக்குங்கள். இவைகளே எமது நிகழ்கால படிப்பினைகள்.

இலங்கை சட்ட யாப்பை வரைந்தவர்கள், அதனை அங்கீகரித்தவர்கள் என எல்லோரும் "நான் இலங்கையன்" எனும் சிந்தனையிலே வாழ்ந்தார்கள்.

துரதிஷ்டம் அன்றைய அரசியல் தலைமைகள் போல இன்றைய அரசியல் தலைமைகளை மக்களாகிய நாம் உருவாக்க தவறிவிட்டோம்.  இன்றைய முஸ்லிம் அரசியலின் இழி நிலைக்கு இதுவே மிக பிரதான காரணம் என்பதையும் மக்களாகிய நாம் எல்லோரும் ஏற்று கொள்ள வேண்டும்.

முஸ்லிங்களின் அரசியல் தலைமைகள் எவ்வாறு இருக்க வேண்டும்? இந்த கேள்வி என்னிலும் உங்களிலும் தாக்கம் செலுத்தாதவரை வேஷம் போடும் தலைவர்கள் வெற்றி தலைவர்களாகவே வலம் வருவார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையவே கிடையாது.

நமது அரசியல் தலைமைகள் எமக்கு முன்மாதிரியானவர்களாக இருக்க வேண்டும். எமது தலைமைகளை பார்த்து மக்களாகிய எம்மில் மாற்றம் வர வேண்டும். இப்படி யாரும் சிந்தித்தது உண்டா?

ஊழல் செய்கிறவர்கள்  போதைவஸ்துக்கு அடிமையாகியவர்கள்  பண்பாடு அற்றவர்கள்ஏ மாற்றுபவர்கள்  நீதி பேணாதவர்கள்  ஒழுக்கமாக பேசத்தெரியாதவர்கள்மா பாதக செயல்களில் ஈடுபடுபவர்கள்  பெரும்பாவங்கள் செய்கின்றவர்கள்...etc 

இவைகள் தான் நாம் இன்று தெரிவு செய்து கொண்டு இருக்கும் அரசியல் தலைமைகளின் தகமை ஆக இருக்கிறது.

இப்படியான தலைமைகள் எப்படி வெற்றி தலைமைகளாக இருக்க முடியும்?

உள்ளுராட்சி மன்றங்கள் தொடக்கம் பாராளுமன்றம் வரை இருக்கும் எமது தலைமைகளின் உண்மை நிலை தான் இது.

இவ்வாறான இன்றைய முஸ்லிம் அரசியல் தலைமைகளினால்...முஸ்லிங்களின் நிம்மதியை சந்தோசத்தை பெற்று கொடுக்க முடியும் என்பது வேடிக்கையானது. 

இருப்பதில் சிறந்தது என்பதும் மீண்டும் ஓர் இருண்ட யுகத்தை நோக்கிய வழிகாட்டுதலாகும். இவர்களின் சிந்தனை மெய்யானது கிடையாது. இவர்கள் வெற்றி பெற்ற தலைவர்களாகவே முடியாது.  முஸ்லிம் சமூகத்திற்கு விமோசனம் பெற்று கொடுக்க இவர்களால் எக்காலத்திலும் முடியாது.

"உண்மை" மட்டுமே வெற்றி அடையும்  இது என்னை படைத்த றப்பின் கட்டளை நான் விசுவாசம் கொண்டிருப்பது மெய்யானது  என்னை வழிநடத்துவது மெய்யானது  இதில் எவ்வித சந்தேகமுமில்லை 
"வெற்றி" அல்லாஹ்வினுடையது வெற்றிக்கு தகுதியானவனாக மாறும் போது மாத்திரமே வெற்றி கிடைக்கும்.

சொல்லினாலும், செயலினாலும் நாம் சான்று பகரக்கூடியவர்களாக மாறும் போது சிறு பான்மை பெரும்பாண்மை வேறுபாடு களையப்பட்டு ஒரு சமூகமாக கரையாமல் கலந்து வாழ்ந்து வெற்றி சமூகமாக மாற முடியும் எனும் இமாம் மௌலானா மௌதூதி அவர்களின் அழகிய விளக்கத்தை முன்வைக்கிறேன்.

சொல்லினாலும், செயலினாலும் நாம் சான்று பகர முடியாத இன்றைய அரசியல் தலைமைகளினால் எமது சமூகத்தை வெற்றி சமூகமாக வழிநடத்த முடியாது என்பதையும் எம்மக்கள் விளங்கி கொள்ள வேண்டும்.

மனாப் அஹமத் றிசாத்
யார் வெற்றித் தலைமைகள்?  யார் வெற்றித் தலைமைகள்? Reviewed by Madawala News on 12/14/2017 05:18:00 PM Rating: 5