Yahya

அம்பலமாகும் பொதுபல நாடகமும் நிர்வானமாகும் ஞானசர தேரரும்..


சிறிது காலம் ஓய்ந்திருந்த பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார
தேரர்இ தற்பொழுது நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் ஒரு மஸ்தியஸ்தராக வெளிப்பட்டுள்ளதை கிந்தொட்ட சம்பவங்களின் போது கண்டுகொள்ள முடிந்தது.

கிந்தொட்ட சம்பவம் சூடு குறைவதற்கு முன்னர் கடந்த 2017 நவம்பர் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நான்இ பெபிலியான பிரிவெனாவின் அதிபர் பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரரின் தாயின் இறுதி மரணச் சடங்கில் கலந்து கொண்டிருந்தேன். அங்கிருந்து வெளியேறும் போது அந்த இடத்துக்கு வருகை தந்த கலகொட அத்தே ஞானசார தேரர் 'சந்திரபிரேம என்பவர் நீர் தானா?' என்று என்னிடம் வினவினார். நான் 'ஆம்' என பதிலளித்தேன். உடனே தேரர் 'நான் உனது கன்னத்தைப் பிழப்பேன்' என கோபமக கூறினார்.

அப்போது நான் தேரரிடம் 'இது அபயதிஸ்ஸ தேரரின் தாயின் மரணச் சடங்கு நிறைவேற்றப்படும் இடம் எனவும்இ ஏதாவது பேசுவதாயின் வெளியே போய் கலந்துரையாடுவோம்' எனவும் தெரிவித்தேன். பின்னர் பாதையை நோக்கி ஒரு சில எட்டுக்கள் செல்லும் போது 'உன்னுடைய பச்சைநிற சமூகத்தைப் பற்றி எனக்குத் தெரியும். உன்னுடைய கன்னத்தைப் பதம் பார்க்கவும் என்னால் முடியும்' என மீண்டும் தேரர் என் மீது பாய்ந்தார். உடனே நான் அந்த இடத்திலேயே நின்று விட்டு 'அப்படியென்றால்இ தேரரே எனது கன்னத்தில் அறையுங்கள்' என்று சொன்னேன். அவ்வேளையில் அந்த இடத்தில் இருந்த சிரேஷ்ட பிக்குகள் தலையிட்டு என்னை வேறு ஒரு இடத்துக்கு இழுத்துச் சென்றனர். அத்துடன் அந்த நிகழ்வு முடிவுற்றது.

இந்த நிகழ்வு குறித்து பொலிஸாரிடம் முறைப்பர்டு செய்தீர்களா? என கொழும்பு டெலிகிராப் இணைத்தள ஆசிரியர் உவிந்து குருகுலசூரிய என்னிடம் வினவினார். ஞானசார தேரர் தொடர்பில் நல்லாட்சி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்து பலனில்லை என நான் அவரிடம் சொன்னேன். இதற்கு முன்னர் பல தடவைகள் பொலிஸார் சட்டத்தை வளைத்து ஒரே தினத்தில் மூன்று தடவைகள் குறித்த தேரருக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்குகளுக்கு பிணை வழங்க நடவடிக்கை எடுத்ததை முழு நாடடு மக்களும் கண்டனர்.

மற்றுமொரு சந்தர்ப்பத்தில்இ வட்டரக்க விஜித தேரர் தனது விகாரை அமையப்பெற்றுள்ள பிரதேசத்துக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளராக பொதுபல சேனா செயற்பாட்டாளர் ஒருவரை நியமித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் உண்ணாரவிரதப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டார். இது ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில நிமிடங்களில் பொலிஸார் அவ்விடத்துக்கு வருகை தந்துள்ளார். அவ்வாறு வந்த பொலிஸார் வட்டரக்க தேரரிடம் ' தற்பொழுது பொதுபல சேனா இந்த இடத்துக்கு வரும் என கூறியுள்ளனர். 

அதேபோன்று கூறி சற்றே நேரத்தில் அவ்விடத்துக்கு பொதுபல சேனாவின் ஞானசார தேரரும் இன்னும் சில பிக்குகளும் அவ்விடத்துக்கு வருகை தந்ததை தொலைக்காட்சி ஊடாக முழு நாடும் கண்டுகொண்டது.

தற்போதைய அரசாங்கத்துக்கும் பொதுபல சேனாவுக்கும் இடையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள தொடர்பு அந்தளவுக்கு பலமானது. இதுபோன்ற தொடர்பு பலப்பட்டுள்ள நிலையில் தேரருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்து என்ன பயன்?. 

ஒரு வகையில் நல்லாட்சி அரசாங்கத்துக்கும் பொதுபல சேனாவுக்கும் இடையில் இந்தளவு தொடர்பு இருப்பது குறித்து புதுமைப்படவும் தேவையில்லை. ஏனெனில்இ ராஜபக்ஷ அரசாங்கத்தை தோல்வியடையச் செய்த ஞானசாரும்இ பொதுபல சேனாவும் ஆற்றிய சேவையைப் பாராட்டி அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட வேண்டும் என டாக்டர் ராஜித சேனாரத்ன நல்லாட்சி அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்து ஒரு சில தினங்களில் என்னிடம் தெரிவித்திருந்தார்.

பொதுபல சேனா கடந்த 2012 இல்தான் ஆரம்பிக்கப்பட்டது. இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டமையானது சிங்கள பௌத்தர்களின் பொற்காலம் ஆகும். சமகாலத்தில் சிங்கள பௌத்த இனவாத அரசாங்கம் ஒன்றே ஆட்சியில் இருந்தது. தமிழ் பிரிவினைவாத பயங்கரவாதத்தை முழு உலகிலும் இருந்து துடைத்தெறிந்த பெருமை அந்த அரசாங்கத்துக்குத் தான் உரியது.

அது மட்டுமல்லாதுஇ விஜய மன்னனின் ஆக்கிரமிப்பு யுகத்தின் பின்னர் நாட்டில் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு தேசத்தின் பொருளாதாரம் அபிவிருத்தியின் உச்சத்தை அடைந்திருந்ததும் அக்காலத்திலேயே ஆகும். சுதந்திரம் அடைந்த நாள் முதல் வந்த அரசாங்கங்களின் வார்த்தைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த அபிவிருத்தி நடவடிக்கைகள் கண்ணெதிரே வந்ததும் அந்தஅரசாங்க காலத்தில் ஆகும்.

சிங்கள பௌத்த இனவாத அரசாங்கத்துக்கு யாரும் சவால்விட முடியாத ஒரு நிலைமை அன்று உருவாகியிருந்தது. அப்போதிருந்த எதிர்க்கட்சிக்கு அரசாங்கமொன்றை கனவிலும் எண்ணிப்பார்க்க முடியாத ஒரு சூழ்நிலைதான் இருந்தது. கடந்த 2012 இல் நாட்டின் நிலைமையை இவ்வாறுதான் சித்தரிக்க முடியுமாக இருந்தது. வெளித்தாக்கத்தினால் அழிக்க முடியாத சிங்கள பௌத்த இனவாத அரசாங்கத்தை அடியோடு பிடுங்கி விடுவதற்கான சதியொன்று 2012 இல் உள்ளிருந்து ஆரம்பமாகியது.

முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து சிங்களவர்களை மீட்டெடுப்போம் எனும் போர்வையில் நாடு முழுவதும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. பல்லின சமூக சூழல் ஒன்றில் ஒரு இனம் மற்றொரு இனத்தின் மீது கொள்ளும் போட்டி பொறாமையின் காரணமாக பிரச்சினை ஏற்படுவது சகஜமாகும். இதுபோன்ற இனப்பிரச்சினைகளை கிராம மட்டத்திலும் நகர்களிலும் தேவையானளவு கண்டுகொள்ள முடியும்.

கடந்த 2012 இன் பின்னர் இந்த நாட்டில் நடைபெற்ற மாற்றம் முக்கியமானது. தேசிய மட்டத்தில் இருந்த சிங்கள பௌத்த இனவாத ஆட்சியை வீழ்த்துவதற்குஇ இலங்கையிலுள்ள மதஇ இனக் குழுக்கள் இடையே கிராம ரீதியிலும்இ நகர்களிலும் பொதுவாகவே இருந்து வந்த இனபேதங்களை மிகவும் தந்திரமாக சிலர் பயன்படுத்தினர். ஆரம்பத்தில் ஹலால் பிரச்சினையில் ஆரம்பமாகியது. அடுத்து முஸ்லிம் வியாபார நிலையங்களை சுற்றிவளைத்தல் இடம்பெற்றது. இதனிடையே முஸ்லிம்களின் வியாபார நிறுவனங்கள் இனந்தெரியாதோரினால் தீயிடப்பட்டன. தாக்குதல்களுக்கு இலக்காகின. இதேவேளைஇ வேறு சிலர் கிறிஸ்தவ மதஸ்தலங்களுக்கும் தாக்குதல் நடாத்தினர். இவ்வளவும் சிங்கள பௌத்த மக்களைக் காப்பாற்றும் நடவடிக்கை எனும் போர்வையிலேயே இடம்பெற்றன. எமது நாட்டில் மன்னர் முறைமையிலான ஆட்சி இல்லை. தேர்தல் மூலம் மக்கள் வாக்குகளினால் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்படும் ஆட்சி முறையே உள்ளது. இந்த நாட்டில் 70 வீதமானோர் சிங்கள பௌத்தர்கள். தமிழர்கள் 15 வீதத்துக்கும் அதிகமானோரும்இ 9 வீதத்துக்கும் அதிகமானோர் முஸ்லிம்களும் வாழ்கின்றனர்.

மொத்த கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுவோர் 7.6 வீதமானோர் உள்ளனர். தேசிய மட்டத்தில் இந்த நாட்டில்; அதிகாரத்துக்கு யார் வரவேண்டும் என்பதை இந்த சிறுபான்மை தொகுதியினர்தான் தீர்மானிக்கின்றனர். இந்த நாட்டிலுள்ள அரசியல் முறைமையினால் சிங்கள வாக்குகள் இரண்டு மூன்று கட்சிகளுக்கு பிரிந்து செல்கின்றன. இந்த நிலையில் சிறுதொகை வாக்குகள் அங்கும்இ இங்கும் மாறுவதை வைத்து ஆட்சி அதிகாரம் மைமாறும் நிலை உள்ளது. ராஜபக்ஷாக்களின் கீழ் நடைபெற்று வந்த சிங்கள பௌத்த இனவாத அரசாங்கத்தை வீழ்த்துவதற்கும் இந்த சிறுபான்மை வாக்குகளின் தந்திரங்கள் தான் கையாளப்பட்டன.

எமது நாட்டிலும் மன்னர் ஆட்சி முறையொன்று இருக்குமாக இருந்தால்இ இந்த நிலை வந்திருக்காது. அரசன் சொல்லும் விதத்தில் சகல சமூகங்களும் கட்டுப்பட்டு வாழ வேண்டியிருந்திருக்கும். இந்தியாவில் காஷ்மீர் பிராந்தியத்தின் பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாக இருந்த போதிலும்இ அப்பிராந்தியத்தை பாகிஸ்தானுடன் இணைய விடாது இந்தியாவுடன் வைத்திருக்க இந்து மத மன்னர் தீர்மானித்ததனால்இ காஷ்மீர் இந்தியாவுக்குரியதாக மாற்றப்பட்டது. இருப்பினும்இ இலங்கையில் உள்ள ஜனநாயக முறைமையினால்இ தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கும் சிங்கள மக்கள் போன்றே வாக்களிக்கும் உரிமை காணப்படுகின்றது.

அதிகாரப் போட்டியான அரசியலில் ஈடுபடுவோர் இந்த உண்மையை அறிந்தே இலங்கை அரசியலில் செயற்பட வேண்டியுள்ளனர். 2012 ஆம் ஆண்டு சிங்களவர்களை காப்பாற்றுவோம் எனும் போர்வையில் ஏற்படுத்தப்பட்ட போரட்டத்தினால் முஸ்லிம்களின் வாக்குகள் முழுமையாக எதிர்க்கட்சியின் பக்கம் சாய்ந்தது. ராஜபக்ஷ அரசாங்கத்துடன் சிங்களஇ கிறிஸ்தவர்களின் வாக்குகள் அதிகளவில் இருந்த போதிலும் 2012 இன் பின்னர் அவர்களின் வாக்குகளும் இழக்கச் செய்யப்பட்டன. கடந்த அரசாங்க காலத்தில் சிங்கள் பொளத்த பிக்குகள் சிங்களவர்களைக் காப்பாற்றுவோம் எனும் போராட்டத்தில் களத்தில் இறங்கியதனால் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆகியோர் எதிர்த்தரப்புக்கு ஆதரவு வழங்க தீர்மானித்தனர். 

இதேவேளைஇ அப்போது எதிர்க்கட்சியிலிருந்தவர்கள் ராஜபக்ஷ குடும்பத்துக்கு எதிரான பொய்யான பிரச்சாரத்தை முடுக்கி விட்டு சிங்கள மக்களின் வாக்குகளை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இத்தகைய செயற்பாடுகளினால் 2012 ஆம் ஆண்டு அசைக்க முடியாத சக்தி என்றிருந்த சிங்கள பௌத்த இனவாத அரசாங்கத்தை 2014 ஆம் ஆண்டு இறுதியில் ஆட்டம் காணச் செய்தனர்.

கடந்த ஜனவரி 2015 இல் இவ்வாறான சூழ்ச்சியினடியாக ஏற்படுத்தப்பட்ட இந்த
நல்லாட்சி அரசாங்கத்தில் பௌத்தர்களும் சிங்களவர்களும் நாய்க்குட்டிகள்
போன்று மாறியுள்ளனர். இந்நிலையிலேயே உள்ளுராட்சி சபைத் தேர்தல் ஒன்று எம்மை நோக்கி வருகின்றது. இந்த சந்தர்ப்பத்திலும் கிராம மட்டத்தில் இனவாதத்தை உசுப்பிவிட்டு ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் இந்த அரசாங்கம் செயற்படுகின்றது என்பதை அண்மைய கிந்தொட்ட சம்பவத்தின் ஊடாக விளங்கிக் கொள்ள முடியுமாகவுள்ளது.

இன்று நாட்டில் 2012 இல் இருந்த சூழல் அல்ல காணப்படுகின்றது. இன்று அதிகாரத்தில் உள்ளவர்கள் முழுமையாக மேலைத்தேயர்கள்இ புலம்பெயர் தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் ஆகியோரின் தாளத்துக்கு ஆடுபவர்கள். தற்பொழுது முழு நாடு மீண்டும் ஒன்றாக்க முடியாதவாறு துண்டாடப்பட்டுள்ளது. நாட்டை ஒன்பது துண்டுகளாக பிரித்து தமிழ் இனவாதிகளுக்கு ஒன்றை வழங்குவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும்.

இந்த அரசாங்கத்தை அதிகாரத்துக்குக் கொண்டுவர பயன்படுத்தப்பட்ட உபாய முறையே மீண்டும் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் இவ்வரசாங்கத்தினால் பயன்படுத்தப்படுகின்றது. அதாவதுஇ கிராம மட்டத்தில் மோதலை ஏற்படுத்தி தேசிய மட்டத்தில் அதிகாரத்தை சுரண்டிக் கொள்ளும் ஒரு நடவடிக்கையே தற்பொழுது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்றது.

கிந்தொட்ட போன்ற இடங்களில் இன மோதல் ஒன்று ஏற்படும் போது சிங்கள
மக்களுக்காக ஆவேஷமாக பேசிஇ முஸ்லிம்கள் மீது அத்துமீறல்களை அடர்ந்தேற்றி அங்குள்ள சிங்கள மக்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே கூட்டமாக தங்களைப் பிரபல்யப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக திரண்டுள்ள சிங்கள பௌத்த சக்திகளை உடைத்துக் கொண்டு எதிர்வரும் தேர்தலில் முன்னுக்கு வரும் அரசாங்கத்தின் முயற்சியாகவே இன மோதல்கள் காணப்படுகின்றன.

இவ்வாறு கிராம மட்டத்தில் சிங்களவர்களுக்காக குரல்கொடுத்து விட்டுஇ அதனடியாகக் கிடைக்கும் வாக்குகளினால் பெறப்படும் அதிகாரத்தை வேறு ஒரு திசையில் திருப்பும் முயற்சியில் நல்லாட்சி அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு குறுக்கு வழியில் உதவும் இனவாத குழுக்களின் நடவடிக்கைகள் திரைமறைவில் இடம்பெற்று வருகின்றது என்பது எவராலும் புரிந்துகொள்ள முடியுமான ஒன்றாகும்.


எங்காவது ஒரு கிராமத்தில் இனங்களுக்கு அல்லது மதங்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டால்இ அந்த இடத்தில் சிங்களவர்கள் ஒன்று சேர்ந்து முஸ்லிம்கள் மீது கல்முள் தாக்குதல் நடாத்திஇ கூச்சல் இட்டுஇ சொத்துக்களை எரித்து சிங்களவர்களுக்கு தற்காலிக சந்தோஷமொன்றை பெற்றுக் கொடுக்கின்றனர். இந்த மோதலில் ஆவேஷமடையும் சில பிக்குகள் முஸ்லிம்களுக்கு எதிராக நடுவீதியில் இறங்கி சண்டித்தனம் புரிந்து தங்களை 'சிங்கள பிக்கு மன்னர்கள்' ஆக அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். இந்த நடவடிக்கையால் கிராம மட்டத்தில் போட்டியிடும் சிங்களவர்கள் வெற்றி பெறுகின்றனர்.

இருப்பினும்இ இதுபோன்ற இனவாத சம்பவங்கள் ஊடாக ஏற்படும் அரசியல்
எழுச்சியினால்இ தேசிய மட்டத்தில் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்பவர்கள் தமிழர்களும்இ முஸ்லிம்களுமே ஆவர். சிங்களவர்களின் வாய்க்கு 'சூப்' ஒன்றை கொடுத்து அவர்களது பூர்வீக உரிமையை பறித்துக் கொள்வது எவ்வளவு சுலபமானது என்பதை சிங்கள எதிர் சக்திகள் நன்கு அறிந்துள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த உண்மையை அடிக்கடி ஞாபகப்படுத்தி வருகின்றார். அதாவது சிங்களவர்களுக்கு ஒற்றையாட்சி என்ற பெயர் பலகையை கட்டிப்பிடித்துக் கொண்டிருக்குமாறு வழங்கிவிட்டுஇ தந்திரமான முறையிலேயே நாம் சமஷ்டி முறைமையை ஏற்படுத்த வேண்டும் என சுமந்திரன் எம்.பி. கூறியுள்ளார்.

முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடாத்தி அவர்களை எதிரணிக்குத் திருப்பும் முயற்சியே கடந்த 2015 ஆம் ஆண்டில் இடம்பெற்றது. ஆனால் தற்பொழுதுஇ முஸ்லிம்கள் மீது அதிகாரம் செலுத்த சிங்களவர்களை ஒருங்கிணைப்பது நாம் மட்டுமே என தெரிவிக்கும் பொதுபல சேனா போன்ற அமைப்புக்களினால் சிங்களவர்கள் ஏமாற்றப்பட்டு அவர்களில் ஒரு குழுவை அமைத்து நல்லாட்சிக்கு எதிரான சக்திகளிலிருந்து தூரமாக்குவது ஆகும். இந்த அனைத்து நடவடிக்கைகளும் ஞானசார தேரர் உட்பட ஒரு குழு நோர்வே நாட்டுக்குச் சென்று வந்ததன் பின்னரேயே நாட்டில் இப்படியொரு நிலைமை ஏற்பட்டது என்பதனை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நன்கு அறிகின்றனர். அக்காலத்தில் முஸ்லிம் தலைவர்களுடன் இது குறித்து நான் கலந்துரையாடியுள்ளவன் என்ற வகையில் இந்த பிக்குகள் தொடர்பில் அவர்கள் என்ன கருத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை கூறமுடிகின்றது.

ஞானசார தேரர் முன்னெடுக்கும் நடவடிக்கை காரணமாக தமது அதிகாரமும் உறுதிப்படுத்தப்படுவதனால் முஸ்லிம் அரசியல் வாதிகளும் அனைத்து குற்றச்சாட்டுக்களையும் மஹிந்த ராஜபக்ஷாக்களின் மீது போட்டனர். ஞானசார தேரர் முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கு முஸ்லிம் மக்களை ஒழுங்கமைத்துக் கொடுக்கும் பணியை கட்சிதமாக செய்து கொடுத்தார். இதனால்இ தேசிய அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு வழங்கும் முஸ்லிம்களும் கூட இன ரீதியாக கட்சிகளுக்கு வாக்களிக்க துணிந்தனர்.

ராஜபக்ஷாக்களுக்கு ஆதரவான சிறிய தொகை முஸ்லிம்களும் கூட இன ரீதியிலான கட்சிகளின் பக்கம் விரட்டியடிக்கப்பட்டனர். பொதுவாக வாக்குச் சாவடிகளுக்குச் செல்லாதவர்கள் கூட வாக்குச் சாவடிகளை நோக்கிச் செல்லும் நிலைக்கு உட்பட்டனர். இதன்படி பார்க்கின்ற போது ஞானசார தேரரின் நடவடிக்கையின் மூலம் முஸ்லிம் இனவாத கட்சிகளுக்கு இலாபம்தான் கிட்டியது. முஸ்லிம் இனவாத கட்சிகள் அடைந்துகொண்ட மிகப் பெரிய வெற்றி என்னவென்றால்இ நாட்டில் இருந்த சிங்கள பௌத்த இனவாத அரசாங்கத்தை துரத்தியடித்ததும்இ தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் தாளத்துக்கு ஆடும் பலவீனமான அரசாங்கம் ஒன்றை அமைத்துக் கொண்டமையும் ஆகும்.

இந்நாட்டின் மக்களில் பெரும்பான்மை சிங்களவர்கள் என்பதனால்இ கிராமங்களில் நடந்தேறும் இனவாத நடவடிக்கைகளில் சிங்களவர்களே வெற்றி பெறுகின்றனர். இருப்பினும்இ இதுபோன்ற நடவடிக்கைகளினால் வாக்குப்பலம் திசை திரும்புவதனால் சிங்களவர்களின் தேசிய ரீதியிலான போராட்டம் தோல்வியடைகின்றது. இந்த இனவாத தாக்குதல்களின் போது முஸ்லிம்களோ கிராம மட்டத்தில் தோல்வியடைந்தாலும்இ தேசிய மட்டத்தில் வெற்றி பெற்றே வருகின்றனர். 2014 ஆம் ஆண்டு அளுத்கம சம்பவத்தின் பின்னர் கிராம மட்டத்தில் முஸ்லிம்களுக்கு 'அபசரண' என்றே காணப்பட்டது. ஆனால்இ தேசிய மட்டத்தில் சிங்களவர்களுக்கு 'அபசரண' யாக அமைந்தது. முஸ்லிம்களுக்கு கிராம மட்டத்திலான வெற்றியை விடவும் தேசிய மட்டத்திலான வெற்றியே பிரதானமானது என்பதை சிங்களவர்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அடிக்கடி கருத்து மோதல்கள்இ நேரடி மோதல்கள் என்பன நிகழும் பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு சமீபமாக வாழும் சிங்களவர்கள் இந்த யதார்த்தத்தை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

கிந்தொட்ட சம்பவத்திலும் நல்லாட்சியிலேயே உள்ள இரு குழுக்கள் கிராம மட்டத்தில் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் தலைமைத்துவத்தை வழங்கி வாக்கு வங்கியை இலக்கு வைத்து செயற்பட்டதை அறிய முடிந்தது. நல்லாட்சியிலேயே உள்ள ஒரு குழு பின்னால் இருந்துகொண்டு கிராம மட்டத்தில் சிங்களவர்களை தூண்டிவிட்டு முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடாத்தியதாக முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒரு போதும் நல்லாட்சி அரசாங்கத்தில் கருத்து முரண்பாடு கொள்வதில்லை.

இதற்குப் பிரதான காரணம்இ ராஜபக்ஷ அரசாங்கத்தைப் போல் அன்றி நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு தங்களுக்கு வேண்டியதை நிறைவேற்றிக் கொள்ள முடியுமாக இருப்பதனாலாகும். தேசிய ரீதியில் முஸ்லிம் ஆதிக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு கிராம மட்டத்தில் முஸ்லிம்களின் வீடுகள் தீ வைக்கப்படுவதுஇ முஸ்லிம்களின் வாகனங்கள் எரிக்கப்படுவது முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு ஒரு பொருட்டல்ல. அளுத்கமை போன்ற சம்பவங்களில் முஸ்லிம் கடைகள் பல தீயில் எரிக்கப்பட்டமை இன்று நாட்டில் முஸ்லிம் தலைவர்களுக்கு அதீத அதிகாரம் கிடைப்பதற்கு காரணமாக அமைந்தன.

கிந்தொட்ட சம்பவத்திலும் முஸ்லிம் இனவாதிகளுக்கும்இ முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கும் நன்மையே விளைந்தது. தற்பொழுது அப்பிரதேச முஸ்லிம் வாக்குகள் சிங்களவர்களுக்கு எதிராக சண்டித்தனம் செய்த நல்லாட்சி அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளின் பக்கம் சேர்ந்துள்ளது. 

மறுபுறத்தில் சிங்களவர்களுக்காக சிங்கள பிக்கு மன்னர் முன்னின்றார். கண்களுக்குப் புலப்படாத சக்தியொன்று பொலிஸாரை நீக்கிவிட்டு முஸ்லிம்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள சிங்களவர்களுக்கு இடமளித்தார். இந்த மோதலில் முஸ்லிம்களையும்இ சிங்களவர்களையும் தயார் செய்வது ஒரே அரசாங்கத்திலுள்ள இரு குழுக்கள் என்பது முக்கியமானது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் 2012 முதல் அடிவாங்கிய முஸ்லிம்களும்இ அடிப்பதற்கு சிங்களவர்களை ஏவிவிட்டவர்களும் ஒரே பக்கத்தில் இருந்து செயற்பட்டதனை எம்மால் காண முடிந்தது. இதுவும் அரசியல் ரீதியில் மக்களை ஒழுங்கமைக்கும் ஒரு உத்தியாகும். கிந்தொட்ட போன்ற சம்பவங்களின் மூலம் கடந்த கால இனவாத விளையாட்டை வேறு வடிவத்தில் மாற்றி முன்னெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது தெளிவாகின்றது. சுங்கள பிக்கு மன்னன் ஒப்பந்தமொன்றை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றார். சகல சிங்கள பௌத்தர்களும் இந்த சூழ்ச்சியை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

கிராம மட்டத்தில் இனவாத பிரச்சினையை உசுப்பேற்றி சிங்களவர்களை மீண்டம் முட்டாள்களாக மாற்றி நாட்டை திரும்பவும் இனவாத துரோகிகளிடம் ஒப்படைக்க முன்னெடுக்கப்படும் நடவடிக்கையின் சுபாவத்தை அவர்கள் விளங்கிக் கொள்ளவேண்டும். சிங்கள பௌத்தர்களின் கிராம மட்ட இனவாத மோதல்களை முன்வைத்து சிங்கள பௌத்த தரப்பினரிடமிருந்து மீண்டும் தேசிய ரீதியில் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறில்லாவிடின்இ சிங்கள ராஜ்ஜியத்தினதும் சிங்கள பௌத்த சாசனத்தினதும் வீழ்ச்சி அடுத்துவரும் வருடங்களில் தீர்மானம் ஆகும் என்பது மட்டும் உறுதியாகும்.

தமிழில் : 
கஹட்டோவிட்ட முஹிடீன் ஆ.யு (ஊநல) நன்றி டெய்லி சிலோன் 
நன்றி : ஞாயிறு திவயின ஆக்கம் :சீ.ஏ. சந்திரபிரேம 
அம்பலமாகும் பொதுபல நாடகமும் நிர்வானமாகும் ஞானசர தேரரும்..  அம்பலமாகும் பொதுபல நாடகமும் நிர்வானமாகும் ஞானசர தேரரும்.. Reviewed by Madawala News on 12/10/2017 01:09:00 PM Rating: 5