Yahya

எந்த ஒரு கட்சியும் ஐக்கிய தேசிய கட்சிக்கு சவால் இல்லை


-மொஹொமட்  ஆஸிக்-
எந்த ஒரு கட்சியும் ஐக்கிய தேசிய கட்சிக்கு சவால் இல்லை என்று  உயர் கல்வி மற்றும்  பெருவீதிகள்
 அபிவிருத்தி அமைச்சர்  லக்ஷ்மன் கிரிஎல்ல தெரிவித்தார்.

கண்டி மா நகர சபை மற்றும் கங்கவட்டகோரலய பிரதேச சபை ஆகியவற்றுக்கு இன்று 16 ம் திகதி கட்டுப்பணத்தை செலுத்திய  பின் ​ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்  ​ ​போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறும் கூறினார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது  கண்டி மாவட்டத்தை நாங்கள் 81000 வாக்குகளால் வெற்றியீட்டி​னோம் .பொதுத் தேர்த்தில் 135000 வாக்குகளால் வெற்றி பெற்றோம். 

ஆகையால் இத் தேர்தலின் போது   ஐக்கிய தேசிய கட்சி அமோக வெற்றி ஈட்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஒருங்கினைந்த எதிர் கட்சியை சேர்ந்த பல உறுப்பினர்கள் அக் கட்சியை விட்டு விலகிச் செல்கின்றனர். அதற்கு காரணம் அதல் இருந்து பயனில்லை என்று அவர்கள் நினைப்பதாகும்.

நாங்கள ஐக்கிய தேசிய கட்சியாகிய நாங்கள்  நாடு முழுவதிலும்  சிறந்த வேட்பாளர்களை தேர்தலில் நிருத்தி உள்ளோம் அவ்வாறு மக்களுக்கு பிடிக்க்தவேட்பாளர்களை இருந்தால் அவர்களுக்கு வாக்களிக்காமல் இருக்க மக்கள் தெரிந்துகொள்ளவேண்டும்  என்றும் அமைச்சர் கிரிஎல்ல இங்கு தெரிவித்தார்.

-ஆஸிக்-
எந்த ஒரு கட்சியும் ஐக்கிய தேசிய கட்சிக்கு சவால் இல்லை  எந்த ஒரு கட்சியும் ஐக்கிய தேசிய கட்சிக்கு சவால் இல்லை Reviewed by Madawala News on 12/17/2017 06:07:00 PM Rating: 5