Kidny

Kidny

முஸ்லிம் பெண்களும் அரசியலில் ஈடுபட தங்களை தயார் படுத்திக்கொள்வது காலத்தின் தேவை


பெண்கள் கட்டாயமாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற சட்டம் அமுல்படுத்தபட்டுள்ள சூழ்நிலையில் முஸ்லிம் பெண்களும் அரசியலில் ஈடுபட தங்களை தயார் படுத்திக்கொள்வது காலத்தின் தேவை என ரோஹினா மஹ்ரூப் குறிப்பிட்டார்.

புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த 6 மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

புலமைப் பரீட்சை என்பது கிட்டத்தட்ட உலகமகா யுத்தம் போல எழுதவிருக்கும் குழந்தைகளின்  வீடுகள் எப்போதும் ஒரு கொதிநிலையிலேயே இருக்கும். நான் பரீட்சை எழுதிய காலங்களைப் போலல்லாது இப்போதெல்லாம் மாணவர்கள் மிக ஊக்கத்தோடு படிப்பதை அவதானிக்க முடிகிறது.

மாணவர்கள் படிப்புத் தவிர்ந்த ஏனைய விடயங்களிலும் குறிப்பாகத் தனக்கு விருப்பமான விடயங்களில் கவனம் செலுத்துதல் மூளைக்கு சுறுசுறுப்பை வழங்கி அதனைப் புத்துணர்வோடு இயங்க வைக்கும். 

புத்தகங்கள் வாசிப்பது, பிடித்த இசையைக் கேட்பது ,சிறிய பயணங்கள் போவது போன்றவற்றை சிறு வயதில் நான் விரும்பிச் செய்திருக்கிறேன்.எனது விருப்பு வெறுப்புகளுக்கு எனது தந்தை ஒரு போதும் குறுக்கே நின்றது கிடையாது. இதுவே வாசிப்பில் மிகுந்த ஈடுபாட்டை எனக்குள் ஏற்படுத்தியது.

இன்று பெண்கள் விரும்பியோ விரும்பாமலோ அரசியலில் ஈடுபடவேண்டிய சூழ்நிலை சட்ட ரீதியாக தோன்றியுள்ளது.அதனால் எமது முஸ்லிம் பெண்களும் அரசியலில் ஈடுபடுவதற்கு தங்களை தயார்படுத்திக்கொள்ளவேண்டும்.

கிண்ணியா குறிஞ்சாக்கேணி கோட்டக்கல்வி வலையத்தைச் சேர்ந்த மிகவும் பின்தங்கிய 3 பாடசாலைகளைச் சேர்ந்த 6 மாணவர்களும் அவரது பெற்றோரும் இந்த நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.
முஸ்லிம் பெண்களும் அரசியலில் ஈடுபட தங்களை தயார் படுத்திக்கொள்வது காலத்தின் தேவை  முஸ்லிம் பெண்களும் அரசியலில் ஈடுபட தங்களை தயார் படுத்திக்கொள்வது காலத்தின் தேவை Reviewed by Madawala News on 12/07/2017 12:37:00 AM Rating: 5