Yahya

ஆசி­ரி­யர்­களை இந்­தி­யா­வி­லி­ருந்து இறக்­கு­வ­தற்கு எதிர்ப்­புத் தெரி­விப்பு!


தோட்­டப்­புறப் பாட­சா­லை­க­ளில் காணப்­ப­டும் ஆசி­ரி­யர் பற்­றாக்­கு­றையை நிவர்த்தி செய்­வ­தற்­காக இந்­தி­யா­வில் இருந்து ஆசி­ரி­யர்­கள் வர­வ­ழைக்­கப்­ப­ட­வுள்­ள­மைக்கு எதிர்ப்பு தெரி­வித்து ஒன்­றி­ணைந்த வேலை­யற்ற பட்­ட­தா­ரி­கள் சங்­கத்­தி­னர் இசு­ரு­பாய பத்­த­ர­முல்­ல­வில் உள்ள கல்வி அமைச்சு பணி­ம­னைக்கு முன்­பாக நேற்று ஆர்­ப்பாட்­டத்­தில் ஈடு­பட்­டார்­கள்.

உள்­நாட்­டில் 53 ஆயி­ரம் பட்­ட­தா­ரி­கள் இருக்­கும் போது இந்­தி­யா­வி­லி­ருந்து ஆசி­ரி­யர்­களை இறக்­கு­மதி செய்­வ­தற்கு அரசு எடுத்­தி­ருக்­கும் தீர்­மா­னத்தை எதிர்க்­கும் மனு­வை­யும் கல்வி அமைச்­சி­டம் கைய­ளித்­தார்­கள்.

நாட்­டி­லுள்ள 53 ஆயி­ரம் பட்­ட­தா­ரி­க­ளில் 8 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் வடக்கு மற்­றும் கிழக்கு மாகா­ணங்­க­ளி­லுள்ள தமிழ் மொழி மூல பட்­ட­தா­ரி­க­ளா­வர். இவர்­கள் தற்­போது பட்­ட­தா­ரி­க­ளாக இருந்­தும் வேலை­யில்லாப் பிரச்­சினை கார­ண­மாக பல்­வேறு அழுத்­தங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ள­னர். இந்த நிலை­யில் வேலை­யில்லாப் பட்­ட­தா­ரி­க­ளுக்கு தொழில் வாய்ப்பைப் பெற்­றுக் கொடுக்க கொள்கை ரீதி­யான தீர்­மா­னத்தை எடுக்க அரசு தவ­றி­யி­ருக்­கி­றது.

தோட்­டப்­புறப் பாட­ச­ாலை­க­ளின் ஆசி­ரி­யர் பற்­றாக்­குறை என்ற போர்­வை­யில் இந்­திய ஆசி­ரி­யர்­களை நாட்­டின் கட்­ட­மைப்­புக்­குள் உள்­வாங்­கும் வகை­யான பேச்சு ஆரம்­பித்­தி­ருந்த போதே அது பற்­றிய எமது நிலைப்­பாட்டை நாம் அர­சுக்கு அறி­வித்­தி­ருந்­தோம். அரசு அது தொடர்­பான எந்த வித­மான முடி­வை­யும் தெரி­விக்­க­வில்லை

ஆசி­ரி­யர்­களை இந்­தி­யா­வி­லி­ருந்து இறக்­கு­வ­தற்கு எதிர்ப்­புத் தெரி­விப்பு!  ஆசி­ரி­யர்­களை இந்­தி­யா­வி­லி­ருந்து இறக்­கு­வ­தற்கு எதிர்ப்­புத் தெரி­விப்பு! Reviewed by Madawala News on 12/13/2017 07:33:00 PM Rating: 5