Yahya

வேட்பு மனு நிராகரிக்கப்படும் சந்தர்ப்பங்கள்


- கஹட்டோவிட்ட ரிஹ்மி -
அண்மையில் நடைபெற்ற 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுத்தாக்கலின் போது பிரதான
கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தமை தேர்தல்கள் ஆணையகம் உள்ளிட்ட தரப்பினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் ஏனைய 248 உள்ளுராட்சி மன்றங்களுக்கு கட்டுப்பணம் செலுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ள திகதி எதிர்வரும் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் முடிவடைகிறதுடன் வேட்பு மனுக்கள் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும். 

இந்நிலையில் ஏற்கனவே முடிவடைந்த வேட்பு மனுத்தாக்கலில் பல கட்சிகளின் அதிகமான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த கட்டமாக வேட்பு மனுத்தாக்கல் செய்யும் கட்சிகளுக்கு விழிப்புணர்வை வழங்குவதற்காக, நிராகரிக்கப்படும் சந்தர்ப்பங்கள் இங்கு தரப்படுகின்றன.

  1. குறித்த உள்ளுராட்சி மன்றில் போட்டியிட வேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு சமனான எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெறாமை
  2. முதலாவது பட்டியலில் குறைந்தது 10 வீதம் பெண்களும் இரண்டாவது பட்டியலில் குறைந்தது 50 வீதம் பெண்களும் இடம்பெறாமை.
  3. கட்டுப்பணம் செலுத்தி பற்றுச்சீட்டு இணைக்கப்படாத வேட்பு மனுப்பட்டியல்
  4. கட்சியொன்றின் செயலாளர் அல்லது சுயேற்சைக் குழுவின் தலைவர் கையொப்பமிடாத வேட்புமனுப்பட்டியல்
  5. சமாதான நீதவான் ஒருவரால் உறுப்படுத்தப்படாத வேட்பு மனுப்பட்டியல்
  6. வேட்பு மனுப்பட்டியல் கட்சியின் செயலாளரால் / அவரால் அதிகாரமளிக்கப்பட்ட முகவரால் அல்லது சுயேற்சைக் குழுவின் தலைவரால் கையளிக்கப்படாமை
குறிப்பு - சில வேளை குறிப்பிட்ட ஒரு சில வேட்பாளருக்கு மாத்திரம் போட்டியிட தடை விதிக்கப்படலாம். 

உதாரணமாக, தேர்தலில் வேட்பு மனுவில் கையொப்பமிடாமை, சத்தியக் கடதாசியில் கையொப்பம் மற்றும் சமாதான நீதவானின் உறுதிப்படுத்தல் இன்மை.
வேட்பு மனு நிராகரிக்கப்படும் சந்தர்ப்பங்கள் வேட்பு மனு நிராகரிக்கப்படும் சந்தர்ப்பங்கள் Reviewed by Madawala News on 12/17/2017 12:16:00 PM Rating: 5