Yahya

வேட்பாளர் ஒருவரைத் தேடி ஹெலிக் கொப்டரில் வரும் நிலமை முஸ்லிம் காங்கிரஸிக்கு ஏற்பட்டுள்ளது.


எம்.ஜே.எம்.சஜீத்

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் ஒருவரைத் தேடி
ஹெலிக் கொப்டரில் வரும் நிலமை முஸ்லிம் காங்கிரஸிக்கு ஏற்பட்டுள்ளது.

 கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை.

அட்டாளைச்சேனை பிரதேச சபையில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் ஒருவரைத் தேடி கொழும்பில் இருந்து பாலமுனை பிரதேசத்திற்கு ஹெலிக் கொப்டரில் வரும் நிலமை முஸ்லிம் காங்கிரஸிற்கு ஏற்பட்டுள்ளது. என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தேசிய  காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அட்டாளைச்சேனை அல்- முனிறா வட்டாரத்தில் தொழில் அதிபர் ஐ.எல்.சயில் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், அம்பாரை மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்.....

நமது பெருந் தலைவர் அஷ்ரப் அவர்கள் நமது சமூகத்தின் நலனை முன்னிட்டு முக்கியமான சந்தர்ப்பங்களில் ஹெலிக் கொப்டரை பாவித்து நமது மக்களுக்கு அரசியல், அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.

இன்றைய முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றஊப் ஹக்கீம் நமது அட்டாளைச்சேனை பிரதேச சபையில் பாலமுனை பிரதேசத்தில் இருந்து ஐக்கிய தேசிய கட்சியின்  யானைச் சின்னத்தில் போட்டியிடுவதற்காக ஹெலிக் கொப்டரில் பாலமுனை வந்து வேட்பாளர் ஒருவரை கொழும்புக்கு அவசரமாக அழைத்துச் சென்று அடுத்த நாள் ஹெலிக் கொப்டரில் வேட்பாளரை பாலமுனைக்கு அனுப்பும் நிலமையில் அட்டாளைச்சேனை பிரதேசத்தில்  முஸ்லிம் காங்கிரஸ் வீழ்ச்சி அடைந்துள்ளது. என்பதனை நமது பிரதேச மக்கள் நன்கு விளங்கி உள்ளனர்.

முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் அதியுயர் பீட உறுப்பினரான அன்சில் கட்சித் தலைவரின் செயற்பாடுகளை விமர்சனம் செய்து முஸ்லிம் காங்கிரசை விட்டு விலகி அட்டாளைச்சேனை பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் வேட்பாளராக போட்டியிடுகின்றார். எப்படியும் முன்னாள் தவிசாளர் அன்ஸிலயை இத்தேர்தலில் தோற்கடிப்பதற்குரிய நடவடிக்கைகளை முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்து வருகின்றன.
ஹெலிக் கொப்டர்களையும், விமானங்களையும் பாவித்து நீண்ட காலமாக தீர்வு காணப்படாத முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் தங்களின் அரசியல் எதிரிகளை அழிப்பதற்கு விமானங்களையும், ஹெலிக் கொப்டர்களையும் பாவித்து முயற்சி செய்கின்றனர்.

அட்டாளைச்சேனைப் பிரதேச மக்கள் கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸிக்கு கண்னை மூடிக் கொண்டு வாக்களித்தனால் நமது பிரதேசம் அடைந்த அடைவினை அடையாளப்படுத்த  முடியாத நிலமை ஏற்பட்டுள்ளது. அம்பாரை மாவட்ட முஸ்லிம் மக்கள் ஒற்றுமைப்பட்டு தங்களின் வாக்குகளை பயன்படுத்தி தங்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவங்களை நேரடியாகப் பெறாமல் ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்திற்கு தங்களின் வாக்குகளை அளித்து விட்டு தேசியப் பட்டியல் அரசியல் பிரதிநிதித்துவத்தை தேடி நமது மக்கள் கொழும்பு சென்று அலையும் நிலமை தொடர்கின்றது.

தலைவர் அஷ்ரப் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான செயற்பாடுகளை நன்கு அறிந்த பின்னர் தான் ரணில் விக்ரமசிங்க தலைவராக இருக்கும் வரை முஸ்லிம்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்க மாட்டோம் என தெரிவித்தார். அன்று தலைவர் அஷ்ரப் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்த முஸ்லிம்களை  முஸ்லிம் காங்கிரஸில் இணைத்து தனது அரசியல் பயணத்தை மேற்கொண்டு வந்தார். இன்று அந்த நிலமை மாறி முஸ்லிம் காங்கிரஸினர் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து செல்கின்ற நிலமையை தற்போதய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீம் ஏற்படுத்தி உள்ளார். 
எனவே, நமது அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள் ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்திற்கு அளிக்கும் ஓவ்வொரு வாக்குகளும் நமது முஸ்லிம் சமூகத்திற்கு ஏதிரான வாக்குகள் என்பதனை நாம் புரிந்து செயல்பட வேண்டும். அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அடிமட்டத்தில் இருந்து நமது பிரதேச மக்களுடன் மக்களாக இருந்து கடந்த காலங்களில் நமது பிரதேச மக்களுக்காகவும், சமூகத்திற்காகவும்,; அர்ப்பணிப்போடு பணி புரிந்துள்ள வேட்பாளர்களை தேசிய காங்கிரஸ் முன் நிறுத்தியுள்ளது.
இவ் வேட்பாளர்களை வெற்றி அடையச் செய்து நமது பிரதேசம் அபிவிருத்தி செயற்பாடுகளில் தன்னிறைவு அடைவதற்கு மக்கள் வாக்களித்து புதிய அரசியல் கலாசாரத்திற்கு பங்களிப்பு செய்ய வேண்டும். நமது பிரதேச அரசியல் அதிகாரத்தினை நமது மக்கள் பேரின வாத கட்சியிடம் கொழும்பு சென்று பிச்சை கேட்கும் நிலமையை தவிர்த்து நமது அரசியல் அதிகாரத்தினை 

நேரடியாக பெறுவதற்கான அரிய சந்தர்ப்பம் நமக்கு கிடைத்துள்ளது. இந்த சந்தர்பத்தினை நாம் பயனுள்ளதாக நாம் மாற்ற வேண்டும்  எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தேசிய காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களும், கல்விமான்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
வேட்பாளர் ஒருவரைத் தேடி ஹெலிக் கொப்டரில் வரும் நிலமை முஸ்லிம் காங்கிரஸிக்கு ஏற்பட்டுள்ளது.  வேட்பாளர் ஒருவரைத் தேடி ஹெலிக் கொப்டரில் வரும் நிலமை முஸ்லிம் காங்கிரஸிக்கு ஏற்பட்டுள்ளது. Reviewed by Madawala News on 12/27/2017 10:46:00 AM Rating: 5