Yahya

திடீர் மரண விசாரணை அதிகாரிகள் சங்கம் மாகாண ஆளுநரிடம் வேண்டுக்கோள்.


-ஜே.எம்.ஹபீஸ்-

திடீர் மரண விசாரணை அதிகாரிகள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு பெற்றுத் தருமாறு  மொணராகளை மாவட்ட  திடீர் மரண விசாரணை  அதிகாரிகள் சங்கம் மாகாண ஆளுநரிடம் வேண்டுக்கோள் விடுத்தனர்..


மொணராகளை மாவட்டசெயலகத்தில் இடம்பெற்ற  சந்திப்பு ஒன்றின் போது ஊவா மாகாண ஆளுநர்  எம்.பீ. ஜயசிங்கவிடம் (இன்று 20 ம் திகதி) மேற்படி வேண்டுகோளை  விடுத்துள்ளனர்.


தமக்கு கிடைக்கும் கொடுப்பணவு போதாத,  அதேநேரம்  மரண விசாரணைகளுக்கு செல்வதற்கான வசதிகளை பெற்றுக்கொடுப்பது, சீறுடை ஒன்றை பெற்றுக்கொள்வது, கணனி ஒன்றை பெற்றுக்கொள்வது உற்பட பல விடயங்கள் தொடர்பாக அவர்கள் இங்கு சுட்டிக்காட்டினர்.


இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஊவா மாகாண ஆளுநர்  எம்.பீ.ஜயசிங்க, திடீர் மரண விசாரணை அதிகாரிகள் பல அசௌகரியங்களுக்கு மத்தியில் தமது கடமைகளை  நிறை வேற்றிவருவதை தாமும் அறிவதாகவும் அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக சம்பந்தப்பட அமைச்சின் கவனத்துக்கு கொண்டு வந்து   சலுகைகளை பெற்றுக் கொடுக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.
திடீர் மரண விசாரணை அதிகாரிகள் சங்கம் மாகாண ஆளுநரிடம் வேண்டுக்கோள். திடீர் மரண விசாரணை அதிகாரிகள் சங்கம் மாகாண ஆளுநரிடம் வேண்டுக்கோள். Reviewed by Madawala News on 12/21/2017 09:26:00 AM Rating: 5