Yahya

மடவளையில் இடம்பெற்ற அகில இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் நிகழ்ச்சியில் தலைவர் அமீர் அஷ்ஷேக் அஜ்ஜூல் அக்பரின் உரை.


-ஜே.எம்.ஹபீஸ்-

சமூகத்தையும் தேசியத்தையும் இணைத்த கலாசாரம் ஒன்று உருவாகினால் மட்டுமே நாட்டுக்கு சபீட்சத்தைக்
கொண்டு வந்து தரும், இஸ்லாம் காட்டும் வழியும் அதுவேயாகும் என அகில இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் அமீர் அஷ்ஷேக் அஜ்ஜூல் அக்பர் தெரிவித்தார்.

அகில இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் மடவளை கிளை ஒழுங்கு செய்த ‘சமூகமாகவாழ்வதே சுமூகத்திற்கான வழி’ என்ற தலைப்பில் அவர் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தாவது-


சமூக வாழ்வு என்பது சுமூகத்திற்கான வெறும் வார்த்தை ஜாலம் அல்ல. மனிதன் மட்டுமன்றி விலங்குகள் பிராணிகள், வனஜீவராசிகள் என்ற அனைத்தும் ஒரு சமூக வாழ்சில் இணைந்திருப்பதை நாம் தெளிவாகக் காண்கிறோம். எரும்பு, ஈ, தேனீ, கரையான் என அனைத்து உயிர்களும் சமூக வாழ்வில் இணைந்துள்ளன. மனிதன் மட்டும் அதில் இருந்து விடுபட முடியாது. குர்ஆனில் சூரா யூசுப் சமூக வாழ்வில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை மிகத் தெளிவாகக் கூறுகிறது. சூரா முஹம்மத் ல் முஹம்மத் நபி பற்றி சொற்ப அளவே உண்டு. சூரா மரியமில் மரியம் (அலை) பற்றி சிறிதளவுதான் உண்டு.


 அதே போல் சூரா இப்ராகிம் உற்பட இன்னும் பலவற்றில் பெயர் தாங்கியவர்கள் பற்றி சொற்பளவே; கூறப்பட்டுள்ளபோதும் சூரா யூசுப் ல் மட்டும் முழுக்க முழுக்க நபி யூசுப் (அலை) அவர்களது சரிதம் கூறப்பட்டுள்ளது. இது ஏன் என நாம் சிந்திப்பதில்லை. யூசுப் நபி அவர்களுக்கு அக்காலத்து எகிப்து நாட்டு அரசன் தீமைகளையே செய்தான். செய்யாத குற்றத்திற்கு சிறையில் அடைத்தான். ஆனால் அந்நாட்டுக்குச் செய்ய வேண்டிய பொறுப்புக்களை  அவர்கள் மேற்கொண்டதன் காரணமாக ஏழு வருட பஞ்சத்தை அவர்கள் வெற்றி கொண்டது மட்டு மல்ல இன்று எமக்கு முன் மாதரியாகவும் ஒரு படிப்பிணையாகவும் அது அமைந்துள்ளது.
எனவே நாம் வாழும் நாட்டில் நலன்கள் பலவற்றைப் பெற்று நாம் நாட்டுக்காகவும் சமூகத்திற்காகவும் எம்மால் ஆன அனைத்தையும் மேற்கொள்வது முக்கிய மாகும்.


அல்லாஹ் தனது திருமறையில் தீயவர்கள் பற்றிக் கூறும் போது அவர்கள் இணைந்து ஒற்றுமையாகக் கரும மாற்றுவது பற்றிக் கூறுகின்றான். இன்று நடைமுறையில் போதைப் பாவணை, போன்ற சில தீய செயல்களை மேற்கொள்வோர் சிறு பிரவான போதும் அவர் இணைந்து கச்சிதமாகவும் ஒற்றுமையாகவும் தமது கருமங்களை முன் எடுக்கும் போது அதிகளவான நல்லவர்கள் அதனைக் கண்டும் காணாதவர்களாகவும் உள்ளனர். இதுவே எமது வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளது.


அதாவது உலகில் குழப்பம் அதிகரிக்கக் காரணமாக நல்லவர்கள் உள்ளனர் என்பதே இதன் மறுபொருளாகும் நல்லவர்களது மௌனம் தீமைக்குக் காரணமாகிறது. நல்லவர்களது தனிமை தீமைக்குக் காரணமாகிறது. நல்லவர்களது சமுக ரீதியற்ற வாழ்வு இயற்கையை பாழ் படுத்துகிறது. இயற்கையை சுரண்டி தான் மட்டும் வாழ வேண்டும் என்ற நிலையை உருவாக்குகிறது.


இனவாதிகளும் போதை வர்த்தகர்களும் தமது சமூக வாழ்வை கச்சிதமாக திட்டமிட்டு தம்மில் ஒற்றுமையை ஏற்படுத்தி உள்ளனர். ஆனால் இது நல்லவர்கள் மேற்கொள்ள வேண்டிய ஒரு நற்பணி என்பதை மறந்து விட்டனர். நல்லவர்கள் அமைதி காப்பது தீமைகள் வளர ஒரு ஊக்கு விப்பாக உள்ளது..

எங்களுக்குறியதை மட்டும் நாம் பாதுகாப்போம், நாமுண்டு எமது வாழ்வுண்டு என்று வாழ்வது மடமையாகும். இது சகலரையும் அழிவுப் பாதைக்கு கொண்டு செல்கிறது.


ஆனால் எம் பெருமானார் (ஸல்) அவர்கள் பொறுமை காத்தார்கள். தமது கோத்திர கௌரவத்தை பாதுகாத்தார்கள். இதனால் அவருக்கு பல உதவிகள் வந்தடைந்தன. அபுதாலிப் பள்ளத்தாக்கில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது தமது கோத்திரத்தாரும் உடன் இருந்தார்கள். ஆனால் இன்று நாம் இனம், மதம், மொழி, பிரதேசம் என்ற பல விடயங்களால் கூறு போடப்பட்டுகிறோம். மேற்படி இரு விடயங்களிலும் நபி(ஸல்) உதாரண புருஷராக மட்டும் இருக்க வில்லை. வாழ்ந்தும் காட்டினார்கள்.


மதீனாவில் வைத்து அவர்கள் யூதர்களுடன் செய்துகொண்ட மதீனா சாசனம் வரலாற்றில் எழுதப்பட்ட முதல் உரிமைச் சாசனம் எனப் பல வரலாற்நு ஆசியர்கள் குறிப்பிடுகின்றனர். 52 பிரிவுகளைக்கொண்ட அச்சாசனம் ஊடாக மதீனாவைப் பாதுகாப்பதற்காக யூதர்களுடன் செய்து கொண்ட உடன் பாடாகும். குறிப்பாக மதீனா என்பது யூதர்களாகிய உங்களுக்கும் சொந்தமானது. நாம் இரு சாராரும் சேர்ந்து மதீனாவைப் பாதுகாப்போபம் என்ற வகையில் அது அமைந்திருந்தது. அவர்களை யூதர்கள் என்றும் எமது எதிரிகள் என்றும் பார்க்க வில்லை. அன்று நபி அவர்களதான்; மதீனாவின் தலைவர். எனவே நபி கூறும் விதமே யூதர்கள் நடக்க வேண்டும் என பணிக்க வில்லை. இவ்வாறு அவர் காட்டிய முன் மாதரிகள் இருக்கும் போது நாம் மற்றவர்களை எதிரிகளாகப் பார்த்து பிரித்தாள முயற்சிக்கிறோம். இதுவே எமது அழிவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். நாம் எமது எதிரிகளை அரவனைத்து பேச்சு வாத்தையில் ஈடுபட வேண்டும்.


ருவண்டா தேசம் ஒருகாலத்தில் இன சுத்திகரிப்பு மேற்கொள்ளப்பட்டு பல்லாயிரம் மக்கள் கொண்டு குவிக்கப்பட்டனர். ஆனால் வெளியுலகு அதனைக் காணாத வாறு மறைக்கப்பட்டன. ஆனால் ருவண்டா வாழ் பொதுமக்கள் அங்கு நடக்கும் அட்டூழியங்களுக்கு எதிராக ஒன்று திரண்டனர். சகல தரப்பையும் அனைத்து முன் சென்றனர். இன்று ஆபிரிக்காவில் ஒரு முன்மாதரி நாடாக அது மாறி வருகிறது. விரட்டி அடிக்கப்பட்ட சிருபான்மை சமூகத்தவர் ஒருவர் நாட்டின் தலைவரானார். அவர் இரண்டாம் முறையும் மக்களால் விரும்பி தெரிவு செய்யப்பட்டார்.


இன்று இலங்கை கூட ருவன்டா எப்படி இனப்பிரச்சினையை  தீர்த்தது என தேடிப்பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாமும் அனைவரையும் அனைத்துச் செல்வதால் சுமூக நிலையை ஏற்படு;ததலாம். கலிமா, தொழுகை, ஸகாத், நோன்பு, ஹஜ் என இஸ்லாத்தின் ஐம் பெரும் கடமைகள் மட்டும்தான் உண்டு என நினைக்க வேண்டாம். அவை தனி மனித கடமைகளாகும். ஒரு தனி மனிதன் இறைவனுக்காகச் செய்யும் கட்டாயக் கடமை அதுவாகும். ஆனால் மனிதன் தன் சமூகத்திற்கு மேற்கொள்ள வேண்டிய கடமைகளும் உண்டு. அதனை மனிதன் மனிதனுக்காகச் செய்யும் கடமை என வறையறைஅ செய்யலாம். அதில் முக்கியமானது ‘சமுக வாழ்வும் சுமூகத்தன்மையும்’ என்பதை மறந்து விட வேண்டாம் என்றார்.
மடவளையில் இடம்பெற்ற அகில இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் நிகழ்ச்சியில் தலைவர் அமீர் அஷ்ஷேக் அஜ்ஜூல் அக்பரின் உரை.  மடவளையில் இடம்பெற்ற  அகில இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் நிகழ்ச்சியில் தலைவர் அமீர் அஷ்ஷேக் அஜ்ஜூல் அக்பரின் உரை. Reviewed by Madawala News on 12/25/2017 02:58:00 PM Rating: 5