Yahya

முஸ்லிம் காங்கிரஸ் தமிழரசு கட்சி இணைந்து போட்டியிடுவது தொடர்பில் இன்றிரவு இறுதித்தீர்மானம் !


வடக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தமிழரசு கட்சி சேர்ந்து போட்டியிடுவது
தொடர்பான இறுதி கட்ட பேச்சுவார்த்தை இன்று இரவு இடம்பெறவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சி உயர்மட்ட உறுப்பினர் ஒருவர் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.

ஏற்கனவே இரு கட்சிகளுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காணப்பட்ட போதும் தமிழரசு கட்சி எம் பி சார்ள்ஸ் நிர்மலனாதனின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து இணைந்து போட்டியிடுவதில் சிக்கல் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது உள்ள நிலமையில் மு கா தமிழரசு கட்சி இணைந்து போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அரிதாகவே காணப்படுவதாக இரு கட்சி வட்டாரங்களில் இருந்தும் கூறப்படுகிறது.
முஸ்லிம் காங்கிரஸ் தமிழரசு கட்சி இணைந்து போட்டியிடுவது தொடர்பில் இன்றிரவு இறுதித்தீர்மானம் !  முஸ்லிம் காங்கிரஸ் தமிழரசு கட்சி இணைந்து போட்டியிடுவது தொடர்பில் இன்றிரவு இறுதித்தீர்மானம் ! Reviewed by Madawala News on 12/20/2017 02:15:00 PM Rating: 5