Yahya

இஸ்ரேலிய படையினரை வெறுங்கையால் அடித்த குற்றத்திற்காக சிறை வைக்கப் பட்டுள்ளார்.16 வயது அஹெட் தமிமி

உலகப் புகழ் பெற்ற பாலஸ்தீன சிறுமி அஹெட் தமிமி, இஸ்ரேலிய படையினரை வெறுங்கையால்
அடித்த குற்றத்திற்காக சிறை வைக்கப் பட்டுள்ளார்.16 வயது அஹெட் தமிமி, சிறுவயதில் இருந்தே அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.இவரது தந்தையும் ஒரு பிரபலமான அரசியல் செயற்பாட்டாளர் தான்

சம்பவ தினத்தன்று, அஹெட் தமிமியின் சகோதரன் படையினரின் ரப்பர் குண்டு தாக்கப் பட்டு காயமடைந்துள்ளார்.அதனால் ஆத்திரமுற்ற அஹெட் தமிமி, வீட்டுக்கருகில் காணப்பட்ட இரண்டு படையினருடன் வாக்குவாதப் பட்டுள்ளார்.ஒரு கட்டத்தில் கையால், காலால் தாக்கியுள்ளார்

அப்போது பொறுமை காத்த படையினர் திரும்பிச் சென்று விட்டனர். இருப்பினும், அதிகாரத்தில் இருப்பவர்கள் சாதாரண மக்களால் தாக்கப் படுவதை சகித்துக் கொள்ள முடியாத இஸ்ரேலிய அரசு, அஹெட் தமிமியை கைது செய்து பழிவாங்கியுள்ளது

இந்தச் சம்பவம் வீடியோவில் பதிவு செய்யப் பட்டு இணையத்தில் பரவலாக பகிர்ந்து கொள்ளப் பட்டது. பாலஸ்தீனர்கள் அவரை ஒரு துணிச்சலான பெண் போராளியாக பார்த்தனர். இஸ்ரேலிய இடதுசாரிகள் சிறுமியின் துணிச்சலையும், படையினரின் பொறுமையையும் பாராட்டினார்கள். அதே நேரம், இஸ்ரேலிய வலதுசாரிகள் "அரச படையினரை தாக்குவது முறையா?" என்று சீறினார்கள்

மேலும் இந்த சம்பவமும், அதைத் தொடர்ந்த நீதிமன்ற விசாரணையும் சர்வதேச ஊடகங்களின் கவனத்தைப் பெற்றன. ஐரோப்பிய- வெள்ளையின முகம் கொண்ட ஒரு பாலஸ்தீன சிறுமியின் தோற்றம்  காரணமாக, மேற்கத்திய ஊடகங்களும் தனிக் கவனம் செலுத்தின. அத்துடன் சிறுவர்களையும் கைது செய்து சிறையில் அடைக்கும் இஸ்ரேலிய அட்டூழியமும் சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது.

-கலையரசன்-
இஸ்ரேலிய படையினரை வெறுங்கையால் அடித்த குற்றத்திற்காக சிறை வைக்கப் பட்டுள்ளார்.16 வயது அஹெட் தமிமி  இஸ்ரேலிய படையினரை வெறுங்கையால் அடித்த குற்றத்திற்காக சிறை வைக்கப் பட்டுள்ளார்.16 வயது அஹெட் தமிமி Reviewed by Madawala News on 12/27/2017 05:57:00 PM Rating: 5