Yahya

ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்காக அரசாங்கம் பாரிய வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது



நிதி மோசடியை ஒழிப்பதற்காக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு உருவாக்கப்பட்டதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்ச்ர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

நேற்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்ட சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இடம் பெற்ற நிகழ்வில் அமைச்சர் உரையாற்றினார்.


அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,


நாட்டில் ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்காக அரசாங்கம் பாரிய வேலைத்திட்டமொன்று மேற்கொண்டுள்ளது.நிதி மோசடியை ஒழிப்பதற்காக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.


இந்த பிரிவின் ஊடாக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை 13 வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.சட்ட மா அதிபரின் ஆலோசனைக்காக 93 பிரச்சினைகள் சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளன.


இது தொடர்பான விசாரணைகள்  சிக்கல் வாய்ந்தவையாகும்.சில கொடுக்கல் வாங்கல்கள் வேறு நாடுகளில் இடம்பெற்றுள்ளன.அவ்வாறான கொடுக்கல் வாங்கல்கள் குறித்து ஆராய்வதற்காக அந்த நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.


உள்நாட்டு விசாரணைக் குழுக்களுக்கு விசேட அறிவை பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. விசாரணை நடவடிக்கைகளுக்கு மனித வளங்களும் குறைவாக உள்ளன.


எனினும், அனைத்து சவால்களையும் வெற்றிகொண்டு இந்த விசாரணைகளில் முன்னெற்றம் காணப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.


அரசியல் அமைப்பின் 19ஆவது திருத்தத்தின் கீழ் நாட்டில் சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டன.இவற்றில் பொலிஸ் ஆணைக்குழுவும் ஒன்றாகும். இதன் மூலம் பொலிஸ் அதிகாரிகளால் அரசியல் அழுத்தங்கள் இன்றி தமது சேவைகளை நிறைவேற்ற முடிந்துள்ளது.


இந்த மாற்றத்தை மக்கள் கண்டுகொள்ள முடியும் என்று சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்காக அரசாங்கம் பாரிய வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது  ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்காக அரசாங்கம் பாரிய வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது Reviewed by Madawala News on 12/10/2017 11:50:00 AM Rating: 5