Yahya

தொழிற்சங்க உரிமைகளைப் பறிக்கின்ற இலங்கை அரசுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறைப்பாடு



தொழிற்சங்க உரிமைகளைப் பறிக்கின்ற இலங்கை அரசுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறைப்பாடு செய்ய இலங்கையின் முன்னணி தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.


தொழிற்சங்க உரிமைகளை இலங்கை அரசு தொடர்ந்தும் பறித்துவந்தால் நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்களை செய்யவும் உத்தேசித்திருப்பதாக அவர்களால் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.


ரயில் திணைக்கள ஊழியர்களின் தொழிற்சங்கத்தை நசுக்கும் அடக்கு முறைக்கு எதிரான தொழிற்சங்கங்களின் ஒன்றியம் கொழும்பில் நேற்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியது.


இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்,


ரயில்வே திணைக்கள ஊழியர்கள் கடந்த 6 தினங்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். எனினும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் தலையிடாமல் நேற்றுய தினமே அரசு அதில் தலையீடு செய்து குழு அமைத்து பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு முயற்சி செய்தது.


எனினும் கடந்த திங்கட்கிழமை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பமாகியதுடன், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதற்கு அரசே பொறுப்பு கூற வேண்டும். சாதாரணமாக தொழிற்சங்கப் போராட்டமொன்றை தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட சந்தர்ப்பங்களில் அதனை தடுப்பதற்கு அரசு அடக்குமுறையை கையாண்டது.


அதன் ஓரங்கமாகவும், ஆயுதமாகவும் பயன்படுத்திய அரசு, ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்க முயற்சித்தமை கண்டிக்கத்தக்க விடயமாகும். ஐரோப்பிய ஒன்றியத்தினால் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டபோது, தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைகளைப் பாதுகாப்பதாக இலங்கை உறுதியளித்தது.


இருப்பினும் உள்நாட்டில் அந்த உறுதிமொழிகளை நிறைவேற்ற அரசு தவறிவருகிறது. இதனை சுட்டிக்காட்டி ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் சென்று இலங்கை அரசுக்கு எதிராக முறையிட தீர்மானித்துள்ளோம்என்றார்.

தொழிற்சங்க உரிமைகளைப் பறிக்கின்ற இலங்கை அரசுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறைப்பாடு  தொழிற்சங்க உரிமைகளைப் பறிக்கின்ற இலங்கை அரசுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறைப்பாடு Reviewed by Madawala News on 12/13/2017 08:46:00 PM Rating: 5