Yahya

சீரற்ற காலநிலையினால் நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பு


சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளும், நஷ்ட ஈடுகளும் அடுத்த இரண்டு வார காலத்திற்குள் முழுமையாக வழங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சீரற்ற காலநிலையினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்றும் பின்னடைவுகள் குறித்து பிரதமர் இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை சமர்ப்பித்தார்.


கடந்த நான்கு பருவகாலங்களுக்கான பயிர்ச் செய்கை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தெங்கு மற்றும் நெற் செய்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. 

மரக்கறி உற்பத்தியில் 30 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டது. சீரற்ற காலநிலை ஏனைய பயிர்ச் செய்கை நடவடிக்கைகளையும் பாதித்துள்ளதாக பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

சீரற்ற காலநிலையினால் நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பு  சீரற்ற காலநிலையினால் நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பு Reviewed by Madawala News on 12/08/2017 05:12:00 PM Rating: 5