Yahya

ஐக்கிய தேசிய கட்சியின் எம் எச் முஹம்மத், ஏ சி எஸ் ஹமீது, பாகிர் மாகார் போன்ற முஸ்லிம் தலைவர்கள் இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதத்தை வளர்த்தார்கள்..



பாகம் 5  (ஏ,எம் எம் முஸம்மில் (B A Hons) –பதுளை). 
 எம் எச் முஹம்மத், ஏ சி எஸ் ஹமீது, பாகிர் மாகார் போன்ற
முஸ்லிம் தலைவர்கள் இலங்கையில் இஸ்லாமிய  தீவிரவாதத்தை வளர்ப்பதற்காக பள்ளிகளை கட்டினார்கள். திட்டமிட்டு முஸ்லிம் தீவிரவாத தொண்டு நிறுவனங்களை உருவாக்கினார்கள். 

ஜே ஆர் ஜெயவர்தனவும் லலித் அதுலத் முதலியும்  1984 ம் ஆண்டில் இஸ்ரேலுடன் ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டார்கள். அப்போது  எல் டி டி ஈ – புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்த முஸ்லிம் அடிப்படைவாதிகள் உட்பட அனைத்து முஸ்லிம்களும் அதனை எதிர்த்து போர்க்கொடி தூக்கினார்கள். 
இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதத்தை தோற்றுவிக்க எஹிப்தின் அடிப்படைவாதியான ஒராபி பாஷா வித்திட்டார். நாடுமுழுவதும் அதை வியாபிக்க சித்திலெப்பை பிரச்சாரம் செய்தார். 1899 ம் ஆண்டு கிண்ணியாவில் உருவாக்கப் பட்ட அல் மதுரசதுள் சைதியா  அடிப்படைவாதத்தை போதிக்கும் மதுரசாவாகும். இதன் உருவாக்கத்துடன் இலங்கையில் நவீன  முஸ்லிம் அடிப்படைவாதமும் ஆரம்பமாகியது.      (பக்கம் 270) 
சிங்கள சமூகத்தில் மேட்டுக் குடிகள் அரசியலில் ஆதிக்கம் செய்தது போல் முஸ்லிம் சமூகத்திலும் மேட்டுக் குடிகள் அரசியலில் ஆதிக்கம் செலுத்தின. இவர்களில் காரியப்பர் குடும்பத்தை சேர்ந்தவர்கள், டி பி ஜாயா போன்றவர்கள் மேட்டுக் குடிகளாக கருதப் படக் கூடியவர்களாவர். ஆங்கிலேயர்களுக்கு சேவகம் புரிந்து இந் நாட்டு மக்களை வீழ்த்துவது தான் இவர்கள் அரசியல் செல்வாக்குப் பெறுவதற்குள்ள ஒரே தகைமையாக கருதப் பட்டது. (பக்கம் 272) 

பதியுத்தீன் முஹம்மது “அல் ஜிஹாத்” என்ற சஞ்சிகையை வெளியிட்டு இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பரப்பினார். 

                    
 ஐ தே கட்சி தான் இலங்கையில் ஜிஹாத் இஸ்லாமிய அடிப்படைவாதம் பரவ உதவி ஒத்தாசைகளை வழங்கியது. 1970 ம் ஆண்டு தேர்தலில் இலங்கை நாடு பூராகவும் சமதர்ம கட்சி வென்ற போது பொத்துவில் நிந்தவூர் தொகுதிகளில் ஐக்கிய தேசியகட்சியின் முஸ்லிம் அடிப்படைவாதம் வென்றது. இதனை கூர்ந்து அவதானிக்கும் போது முஸ்லிம் அடிப்படைவாதம் எந்தளவு பலம் வாய்ந்தது  என்று விளங்கலாம். 

முஸ்லிம் அடிப்படைவாதத்தை நாடுமுழுவதும் கட்டிஎளுப்பும் நோக்கில் பதுயுத்தீன் முஹம்மது கொழும்பிலிருந்து தூர பிரதேசங்களிலும் முஸ்லிம் கல்விமான்களை உருவாக்கினார். இதன் மூலம் திருகோணமலை ,மட்டகளப்பு .அம்பாறை , கண்டி போன்ற பகுதிகளில்  முஸ்லிம்களின்   கல்வி கற்ற பரம்பரையை  கொழும்புக்கு வெளியே உருவாக்கினார். இவ்வாறு உருவாக்கப் பட்டவர்கள் தான் பிற்காலத்தில் ஸ்ரீ ல முஸ்லிம் காங்கிரஸ்சில் சேர்ந்தார்கள். (பக்கம் 273).
ஐக்கிய தேசிய கட்சியின் எம் எச் முஹம்மத், ஏ சி எஸ் ஹமீது, பாகிர் மாகார் போன்ற முஸ்லிம் தலைவர்கள் இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதத்தை வளர்த்தார்கள்..  ஐக்கிய தேசிய கட்சியின் எம் எச் முஹம்மத், ஏ சி எஸ் ஹமீது, பாகிர் மாகார் போன்ற முஸ்லிம் தலைவர்கள் இலங்கையில் இஸ்லாமிய  தீவிரவாதத்தை வளர்த்தார்கள்.. Reviewed by Madawala News on 12/17/2017 01:05:00 PM Rating: 5