Yahya

எதிர்வரும் தேர்தல்களில் எவரையும் ஆதரிக்கப்போவதில்லை..


எதிர்வரும் காலத்தில் இடம்பெறும் தேர்தல்களில் எந்த ஒரு அரசியல் வாதிக்கும் அல்லது கட்சிக்கும்
தாம் ஆதரிக்க போவதில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டார்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் குழு மற்றும் கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று, கொழும்பு ஆயர் இல்லத்தில் வைத்து நடைபெற்றுள்ளது

அதனை தொடர்ந்து அங்கு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஞானசார தேரர் ..

கடந்த 2015 தேர்தலில் தாங்கள் அரசியல் வாதிகளுக்கு ஆதரவு வழங்கி வாங்கி கட்டிக்கொண்டதாக கூறிய அவர் தற்போது நாட்டில் தலைவர்கள் அதிகரித்து விட்டதாகவும் அதனால் தற்போது அமைதியாக இருந்து நடப்பவைகளை பார்த்துக்கொண்டு இருப்பது சிறந்தது என அவர் குறிப்பிட்டார்.

மேலும், கடந்த 2012ம் ஆண்டு இது குறித்து அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சமர்ப்பிக்கப்பட்ட எழுத்து மூல யோசனை, அரச சார்பற்ற நிறுவனங்கள் பணத்தை செலவிட்டு மேற்கொண்டு வரும் கருத்தடை வேலைத்திட்டங்கள் தொடர்பான சாட்சியங்கள் மற்றும் விபரங்களை ஆயரிடம் ஞானசார, வழங்கியுள்ளார்

எதிர்வரும் தேர்தல்களில் எவரையும் ஆதரிக்கப்போவதில்லை..  எதிர்வரும் தேர்தல்களில்  எவரையும் ஆதரிக்கப்போவதில்லை.. Reviewed by Madawala News on 12/14/2017 07:29:00 PM Rating: 5