Kidny

Kidny

அரசாங்கத்தை கவிழ்க்க, நாமல் ராஜபக்ச பொட்ஸ் ( Bots) தொழில்­நுட்­பத்தை பயன்படுத்துகிறார்.


நவீன இணை­யத்­த­ளங்­களின் சதித்­திட்­டங்கள் ஊடாக மக்­களை திசை­தி­ருப்ப முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. அத்­துடன் மக்­களை திசை­தி­ருப்பும் அதி நவீன இணையத்­த­ள­மான பொட்ஸ் ( Bots) தொழில்­நுட்­பத்தை எமது நாட்டில் அதிகம் பாவிப்­பது நாமல் ராஜ­பகஷ­வாவார் என நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார்.

இலங்கை உழைக்கும் பத்­தி­ரி­கை­யாளர் சங்­கத்தின் உத்­தி­யோ­க­பூர்வ இணைத்­தள அங்­கு­ரார்ப்­பண நிகழ்வு நேற்று இலங்கை இத­ழியல் கல்­லூ­ரியில் இடம்­பெற்­றது. இதில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

சதித்­திட்­டங்கள் மூலம் சாதா­ரண இரா­ணு­வத்­துக்கு அர­சாங்­கத்தை வீழ்த்­த­முடி­யாது. மாறாக ட்ரோல்  இரா­ணு­வத்­துக்கே அர­சாங்­கங்­களை வீழ்த்த முடியும்.

ட்ரோல் ராணுவம் என்­பது ஆயி­ரக்­க­ணக்­கான பொய் தக­வல்­களை சேக­ரித்­துக்­கொண்டு அறைக்குள் இருந்­து­கொண்டு மணித்­தி­யா­ல­யத்­துக்கு ஒன்று வீதம் இணை­யத்­த­ளங்­களில் தொடர்ந்து அவற்றை வெளி­யி­டு­வ­தாகும்.

ஒரே தகவல் பல இணை­யத்­த­ளங்­களில் வரும்­போது உண்­மை­யான ஊட­க­வி­ய­லா­ளர்­களும் அதனை அதில் இருந்து எடுத்து பிர­தான ஊட­கங்­களில் பிர­சு­ரிக்­கின்­றனர். பின்னர் அந்த செய்தி முழு நாட்­டிலும் உண்­மை­யாக்­கப்­ப­டு­கின்­றது.

அத்­துடன் ட்ரோல் ராணுவம் இன்று இலங்­கை­யிலும் சதித்­திட்டம் செய்து வரு­கின்­றது. அது மாத்­தி­ர­மல்ல இந்த ட்ரோல்ராணு­வத்­தையும் விடவும் பயங்­க­மா­ன­தொன்றும் இருக்­கின்­றது. அதுதான் பொட்ஸ் தொழி­நுட்­ப­மாகும்.

இது இணைத்­தள குறி­யீ­டொன்றின் மூலமே செயற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. இது­தொ­டர்­பாக நாங்கள் ஆய்­வு­செய்து பார்க்­கும்­போது இதன் அடிப்­படை ரஷ்யா, லிபியா போன்ற நாடு­க­ளி­லேயே உள்­ளது. இந்த பொட்ஸ் தொழி­நுட்­பத்தை அதிகம் பாவிப்­பது எமது நாட்டில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்ஷ்­வாகும்.

அத்­துடன் இந்த வருடம் மாத்­திரம் நாமல் ராஜ­பக்ஷ்வின் மொத்த  பொட்ஸ் உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை 100வீதம் திடீ­ரென அதி­க­ரித்­துள்­ளது. இதனை நான் பொறுப்­புடன் தெரி­விக்­கின்றேன்.

மிகவும் திட்­ட­மிட்டு மக்­களை திசை­தி­ருப்ப புதிய தொழி­நுட்­பங்கள் பாவிக்­கப்­பட்டு வரு­கின்­றன. அதனால் 21ஆம் நூற்­றாண்டில் இணைத்­த­ளங்­க­ளுக்கு இடைக்­கால தடை என்­பது பொருத்­த­மற்­ற­தொன்­றாகும். லங்கா ஈ நியூஸ் தடை செய்­யப்­பட்­டுள்­ளது. ஆனால் அதன் அறிக்­கைகள் செய்­திகள் வேறு­வ­ழியில் வெளி­வந்து கொண்­டுதான் இருக்­கின்­றன.

மேலும் அர­சியல் வாதி­க­ளுக்கும் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­கு­மி­டையில் பிரச்சினை இருக்­க­வேண்டும். அப்­போ­துதான் நாட்டில் ஜன­நா­ய­கத்தை உறு­திப்­ப­டுத்­தலாம். மாறாக அர­சி­யல்­வா­தி­களும் ஊட­க­வி­ய­லா­ளர்­களும் நண்­பர்­க­ளாக இந்தால் ஜன­நா­ய­கத்தை உறு­திப்­ப­டுத்த முடி­யாது.

அத்­துடன் நாட்டில் இன்று சட்­டத்தின் ஆட்சி இடம்­பெ­று­கின்­றது. கடந்த காலத்­தையும் விடவும் இந்த காலப்­ப­கு­தியில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் சுதந்­தி­ர­மாக செயற்­பட வழி­ய­மைக்­கப்­பட்­டுள்­ளது.

 கடந்த காலங்­களில் அரச ஊட­கங்கள் எதி­ர­ணி­யி­னரை மிகவும் மோச­மான வார்த்­தை­களால் விமர்­சிக்கும் நிலை இருந்­தது. ஆனால் இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­ததன் பின்னர் ஒரு­சில தனியார் ஊட­கங்­க­ளை­விட அரச ஊட­கங்கள் நேர்­மை­யாக செயற்­ப­டு­கின்­றன.

அத்­துடன் கடந்த காலங்­களில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் அர­சி­யல்­வா­தி­களின் கையா­ளர்­கள்­போன்று செயற்­ப­ட­வேண்­டிய நிலைக்கு தள்­ளப்­பட்­டி­ருந்­தனர். அந்த நிலை தற்­போது மாறி­யுள்­ளது.

ஊட­க­வி­ய­லா­ளர்­களின் பிரச்­சி­னைகள் தொடர்­பாக கலந்­து­ரை­யாட ஊடக பிர­தா­னிகள் மற்றும் ஆசி­யர்­க­ளுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்தும் ஒரு­சி­லரே சமுகம் தந்­தி­ருந்­தனர். பிர­தான பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்கள் வர­வில்லை. ஆனால் இந்த பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்கள் மீண்டும் பிரச்­சி­னையை வெளிக்­கொண்­டு­வ­ரு­வ­தற்­கென்றால் இரவு பக­லாக செயற்­ப­டு­வார்கள்.

அதே­போன்று நாட்டில் இன­வா­தத்தை தூண்­டி­வரும் தேரர்­களை வீரர்­க­ளாக்­கு­வ­தற்கும் சில பத்திரிகைகள் முயற்சிக்கின்றன. அது தொடர்பான செய்திகளை முன்பக்கத்தில் பாரிய எழுத்தில் பிரிசுரிக்கின்றனர்.

கடந்த காலத்தில் இடம்பெற்ற பித்தலாட்டங்களை மீண்டும் சில ஊடகங்களின் அனுசரணையுடனே மேற்கொள்ள திட்டமிடப்படுகின்றன.

எனவே நாங்கள் தற்போது அடைந்திருக்கும் ஊடக சுதந்திரத்தை பாதுகாத்துக்கொள்ள அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் இணைந்து செயற்படவேண்டும். அதற்காக நீண்ட கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவேண்டும் என்றார்.
அரசாங்கத்தை கவிழ்க்க, நாமல் ராஜபக்ச பொட்ஸ் ( Bots) தொழில்­நுட்­பத்தை பயன்படுத்துகிறார். அரசாங்கத்தை கவிழ்க்க, நாமல் ராஜபக்ச பொட்ஸ் ( Bots) தொழில்­நுட்­பத்தை பயன்படுத்துகிறார். Reviewed by Madawala News on 12/06/2017 02:07:00 PM Rating: 5