Yahya

புத்தர் ஆடை பெண்னால் சர்ச்சை.

புத்தர் உருவத்துடனான ஆடை அணிந்த பெண் ஒருவர் தெஹிவளை மிருகக்காட்சி
சாலையில் சுற்றி திரிந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

அவர் இலங்கை பெண்ணா அல்லது வெளிநாட்டு பெண்ணா என்று இன்னமும் அடையாளம் காண முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணியளவில் செம்மஞ்சள் நிறத்திலான ஆடை அணிந்திருந்த பெண் தொடர்பில் அதிகம் பேசப்படுகிறது.
குறித்த பெண் அணிந்திருந்த ஆடை முழுவதும் புத்தர் உருவம் பொறிக்கப்பட்டிருப்பதனை பலர் அவதானித்துள்ளனர்.

இது குறித்த அவசர பொலிஸாருக்கு 119 என்று இலக்கத்தின் ஊடாக அறிவித்துள்ளனர். எனினும் பொலிஸார் மற்றும் மிருகக்காட்சி சாலை பாதுகாப்பு அதிகாரிகள் அதனை கண்டு கொள்ளவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

இலங்கை சட்டத்திற்கமைய புத்தர் உருவத்துடன் ஆடை அணிந்தால், அணிபவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள முடியாதென்பதனால் யாராலும் ஒன்றும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில், சமூக வலைகளில்  தெரிவிக்கப்படுகிறது.
புத்தர் ஆடை பெண்னால் சர்ச்சை. புத்தர் ஆடை பெண்னால்  சர்ச்சை. Reviewed by Euro Fashions on 12/12/2017 11:25:00 AM Rating: 5