Yahya

இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முன்னேறினர்.


இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் ஆதிக்கம் செலுத்திய இலங்கை வீரர்கள், சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

இத்தொடரில் சதம் விளாசிய அஞ்சலோ மத்தியூஸ் 2 இடங்கள் ஏற்றம் கண்டு 24வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

மேலும் நடப்பு வருடத்தில் ஒரு நாள் போட்டிகளில் ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த 3வது வீரர் என்ற பெருமையை பெற்ற உபுல் தரங்க, 15 இடங்கள் ஏற்றம் கண்டு 36வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். மேலும் நிரோஷன் டிக்வெல்ல 7 இடங்கள் முன்னேற்றம் கண்டு 37வது இடத்தை பெற்றுள்ளார்.

ஒரு நாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி 876 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். தென்னாபிரிக்காவின் டி வில்லியர்ஸ் 872 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், அவுஸ்ரேலிய வீரர் டேவிட் வோர்னர் 865 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 846 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் மாற்றமின்றி நீடிக்கின்றனர்.

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் தனது 3வது இரட்டைச் சதத்தை பூர்த்தி செய்த ரோஹித் சர்மா முதல்முறையாக 800 புள்ளியை கடந்து 2 இடங்கள் முன்னேற்றம் கண்டு 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முன்னேறினர். இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் முன்னேறினர். Reviewed by Madawala News on 12/21/2017 10:18:00 AM Rating: 5