Yahya

பொறுப்பற்ற செயல்... 2 பேர் பலியாகி பலர் காயமடைந்த கோர விபத்தின் காரணம் வெளியானது.


இரத்தினபுரி – பாதுல்பான பிரதேசத்தில் இன்று அதிகாலை பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளான தனியார் பேருந்தை செலுத்திய அதன் நடத்துனருக்கு, சாரதி அனுமதி பத்திரம் இல்லை என தெரியவந்துள்ளது.

பேருந்தின் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதால் உடவல பிரதேசத்தில், நடத்துனருக்கு பேருந்தை செலுத்த சாரதி வழங்கியுள்ளதாக இதற்கு முன்னர் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் பெண்ணொருவரும், ஆணொருவரும் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 44 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்து தொடர்பில் பயணி ஒருவர் தெரிவிக்கையில், விபத்து இடம்பெறும் போது பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சியை நடத்துனர், ஒரு கையால் சரி செய்ய முற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதன்போது முன்னால் வந்த சிறிய பாரவூர்தியில் பேருந்து மோதவிருந்த நிலையில், அதனை தடுக்க முயன்ற வேளையே இந்த விபத்து இடம்பெற்றதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விபத்தின் பின்னர் பேருந்தின் சாரதி தப்பிச் சென்றுள்ள நிலையில், பின்னர் காவல்துறையில் சரணடைந்துள்ளார்.

இந்நிலையில் அவர் இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பவுள்ளார்.
பொறுப்பற்ற செயல்... 2 பேர் பலியாகி பலர் காயமடைந்த கோர விபத்தின் காரணம் வெளியானது. பொறுப்பற்ற செயல்... 2 பேர் பலியாகி பலர் காயமடைந்த கோர விபத்தின் காரணம் வெளியானது. Reviewed by Madawala News on 12/23/2017 05:56:00 PM Rating: 5