Yahya

விபத்தில் முனீப் உயிரிழப்பு. ( உயர்தர பெறுபேற்றை எதிர்பார்த்திருந்த நிலையில் சோகம்)



ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பில் ஏற்பட்ட  விபத்தில் காத்தான்குடி ஸாவியா லேன் முனீப் (19 வயது)
மாணவன் மரணமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

ஏறாவூரில் இருந்து காத்தான்குடி நோக்கி பயணிக்கையில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி வீதியில் விழுந்த வேளை கூலர் வாகனம் தலையில்  ஏறி மரணம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த மற்றொருவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவரின்  ஜனாசா மட்டு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

இந்த மாணவர் உயர்தர பரீட்சை எழுதிவிட்டு இம்மாதம் வெளியாகும் பெறுபேருக்கு காத்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

- முகம்மத் அஸ்மி-
விபத்தில் முனீப் உயிரிழப்பு. ( உயர்தர பெறுபேற்றை எதிர்பார்த்திருந்த நிலையில் சோகம்) விபத்தில் முனீப் உயிரிழப்பு. ( உயர்தர பெறுபேற்றை எதிர்பார்த்திருந்த நிலையில் சோகம்) Reviewed by Euro Fashions on 12/23/2017 09:01:00 PM Rating: 5