Kidny

Kidny

உதய கம்மன்பில போன்றவர்களிடமிருந்து கோட்டாபாய எச்சரிக்கையாகவிருக்க வேண்டும் .


இரும்பு சப்பாத்துக்களை அணிந்து அவற்றால் மக்களை நசுக்கிக் கொண்டு அபிவிருத்தித் திட்டங்களை நாம் முன்னெடுப்பதில்லை. மக்களின் விருப்பத்துடனேயே அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துவருவதாக பெருநகரங்கள் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

அதேநேரம், உதயகம்மன்பில போன்றவர்களிடமிருந்து கோட்டாபாய எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பெருநகரங்கள் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதம்  நடைபெற்றது.

இதில் உரையாற் றிய ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவராக இருந்த கோட்டாபாய கொழும்பு நகரில் முன் னெடுத்திருந்த வேலைத்திட்டங்களை உயர்வாகப் பேசியிருந்ததுடன், தற்பொழுதுள்ள அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வினைத்திறனான செயற்பா டுகளை முன்னெடுப்பதில்லையென குற்றஞ்சாட்டியிருந்தார்.

வெறுமனே ஊடகங்களில் பிரசாரங்களை முன்னெடுக்கும் அமைச்சர், கோட்டாபாயவின் சப்பாத்துக்களை அணிய முயற்சித்தா லும், அவை அமைச்சரின் கால்களுக்கு பெரிதானவை என விமர்சித்திருந்தார்.

உதயகம்மன்பில எம்பியின் இந்த விமர்சனத்துக்குப் பதிலளித்த அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க,

பராளுமன்றத்தை பிழையாக வழிநடத்தும் வகையில் குறித்த எம்பி கருத்துக்களை முன்வைப்பதாகச் சுட்டிக்காட்டிய துடன், தான் பெற்றுக் கொண்டுள்ள ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்றத்துக்கு வெளியே எமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருவதாகவும் கூறினார்.

புளுமென்டல் குப்பை மேடடுக்குப் பதிலாக பாதுக்க பகுதியில் குப்பை முகாமைத்துவத்துக்கான யோசனை யொன்றை முன்வைத்திருந்தோம்.

அக்காலத்தில் கற்றாடல் அபிவிருத்தி அதிகாரசபயையின் தலைவராக உதய கம்மன்பில இருந்தார்.

எம்மால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனையை அப்போதையநகர அபிவிருத்தி அமைச்சர் தினேஷ் குணவர்தன நடைமுறைப்படுத்தச் சென்றபோதும், குறித்த பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் வர்த்தமானிப்படுத்தி யதால் இத்திட்டத்தை முன்னெடுக்க முடியாமல் போனது.

அதன் பின்னரே மீத்தொட்டமுல்லை பிரதேசத்தில் குப்பைமேடு உருவானது. கொழும்பு நகரில் கழிவுநீர் முகாமைத்துவத்தை நடைமுறைப்படுத்தியது கோட்டாபய ராஜபக்ஷ அல்ல. இது நீண்ட வருடங்களுக்கு முன்னர் உலக வங்கியின் உதவியுடன் திட்ட மிட்டப்பட்ட வேலைத்திட்டமாகும்.

இதனை நடைமுறைப்படுத்தியது மாத்திரமே அவராகும். இதேவேளை, லேக்ட்ரைவ் பிரதே சத்துக்கான இடத்தை வழங்கியது நாம்
அல்ல.  மஹிந்த மற்றும் கோட்டபாய  ராஜபக்ஷவுமே வழங்கினர்.


நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பாரிய கடன்  ஏற்படுத்தும் வகையில் இந்த இடம் வழங்கப்பட்டிருந்தது.

கடன்சுமையிலிருந்து தப்பவைப்பதற்காக மோசடி அற்ற நான்கு திட்டங்களை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங் கீகாரம் வழங்கியிருந்தது.

மீளாய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே அத்திட் டங்கள் அங்கீகரிக்கப்பட்டன.

கடந்த ஆட்சியில் சங்கரிலா ஹோட் டலுக்கான இடம் விற்பனை செய்யப்பட்டது போல் அன்றி, திறந்த முறையில், போட்டி அடிப்படையிலேயே காணிகள் வழங்கப்பட்டுள்ளன.

கொழும்பு நகரில் தோட்டப்புற வீடுகளில் வசிக்கும் மக்கள் கோட்டாபயவிக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடியதைப் போன்று தற்பொழுது போராடுவதில்லை.

தோட்டப்புற மக்களுக்கு 6000 வீடுகளை அமைத்துக் கொடுத்துள்ளோம்.

நாம் இரும்புச் சப்பாத்துக்களை அணிந்துகொண்டு மக்களை நசுக்கும் வகையில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப் பதில்லை.

மக்களின் விருப்பத்துட னேயே அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுக்கின்றோம். இவ்வாறான நிலையில், உதய கம்மன்பில போன்றவர்களிடமிருந்து கோட்டாபாய எச்சரிக்கையாகவிருக்க வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

உதய கம்மன்பில போன்றவர்களிடமிருந்து கோட்டாபாய எச்சரிக்கையாகவிருக்க வேண்டும் . உதய கம்மன்பில போன்றவர்களிடமிருந்து கோட்டாபாய எச்சரிக்கையாகவிருக்க வேண்டும் . Reviewed by Madawala News on 12/04/2017 08:44:00 AM Rating: 5