Yahya

மக்­களை விரட்டி, நிலங்­களை கைப்­பற்றி, ஆக்­கி­ர­மிப்பு செய்து சர்­வா­தி­கா­ர­மாக ஆட்­சி மூலம் அபி­வி­ருத்­தி­யை முன்­னெ­டுக்க கூடாது.


இரா­ணு­வத்தை முன்­னி­றுத்தி பொதுமக்­களின் இடங்­களை ஆக்­கி­ர­மித்து இறுதியில் இரா­ணு­வத்­தையே குற்­ற­வா­ளி­யாக்­கிய சர்­வா­தி­கார ஆட்­சி­யியை முன்­னெ­டுக்க நாம் தயார் இல்லை. ஜன­நா­யக ரீதியில் ஒன்­றி­ணைந்த பொரு­ளா­தா­ரத்தின் மூல­மாக நாட்­டிடைக் கட்­டி­யெ­ழுப்­பு­வதே நல்­லாட்சி அர­சாங்­கத்தின் நோக்கம் என்று பாரிய நகர மற்று மேல் மாகாண அபி­வி­ருத்தி அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். பொரு­ளா­தா­ரமும், ஜன­நா­ய­கமும் ஒன்­றி­ணைந்து பய­ணித்தால் மட்­டுமே நாடு வளர்ச்சி காணும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.


மேல் ­மா­காண அபி­வி­ருத்தி வேலைத்­திட்ட நிகழ்­வொன்று நேற்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் கொழும்பில் இடம்­பெற்­றது. இந்நிகழ்வில் கலந்­து­கொண்ட அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் கூறு­கையில்,

மக்­களின் தேவைக்­கா­கவே எமக்கு நிதி ஒதுக்­கப்­ப­டு­கின்­றது. மாறாக மக்­களின் நிதியில் எமது தேவை­களை நிறை­வேற்றி­க் ­கொண்டால் அதனை ஒரு­போதும் ஏற்­று­க்கொள்ள முடி­யாது.

எமது தாய் தந்­தைக்கு நினை­வுத்­தூபி அமைக்க கோடிக்­க­ணக்கில் செலவழித்து எந்த அர்த்­தமும் இல்லை. மாறாக மக்­களின் தேவை­களை நிறை­வேற்றும் வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்க வேண்டும். அதுவே மக்கள் ஆட்­சியின் மாற்­ற­மாகும்.

 இன்று அவ்­வா­றான மாற்றம் இடம்­பெற்­றுள்­ளது. மக்­களின் தேவைக்­காக நாம் பாரிய வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.

கடந்த காலத்தில் பாது­காப்பு தலைமை அலு­வ­லகம் ஒன்றை அமைத்தோம். இது அமெ­ரிக்­காவின் பெண்­டகன் கட்­டடத்தை மட்­டுமே சமப்­ப­டுத்­த­வில்லை. மாறாக முழு நிதியும் அதற்கே செலுத்­தப்­பட்­டது.

இதற்­கான 62 ஆயிரம் மில்­லியன் செல­வ­ழிக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் காலி­முகத்­தி­டலை விற்று இதனை நிர்­மா­ணிக்­கவே சிலர் முயற்சி செய்­தனர். இவ்­வா­றான ஆட்சி முறைமை இன்று இல்லை.

எமது அபி­வி­ருத்­திகள் மூல­மாக மக்­களின் பொரு­ளா­தாரம் வளர்ச்சி அடை­கின்­றதா, நாடு வளர்ச்சி காண்­கி­றதா என்­ப­தையே அவ­தா­னிக்க வேண்டும். மாறாக ஒரு­சிலர் மாத்­திரம் அனு­ப­விக்கும் பொரு­ளா­தார வளர்ச்சி ஒரு­போதும் நாட்­டுக்கு பொருந்­தாது.


அனைத்து அபி­வி­ருத்தி வளர்­ச்சி­களின் மூலமும் நாட்­டை மக்­க­ளையும் பலப்­ப­டுத்த வேண்டும். இன்று நாட்டின் வளர்ச்­சியில் நான்கில் ஒரு பங்கு எமது வேலைத்­திட்­டங்­களின் மூல­மா­கவே முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. எமது நிர் மாண வேலைத்­திட்­டங்­களின் மூல­மா­கவே இதனை செய்­துள் ளோம்.

வலுக்­கட்­டா­ய­மாக மக்­களை விரட்டி, நிலங்­களை கைப்­பற்றி, ஆக்­கி­ர­மிப்பு செய்து சர்­வா­தி­கா­ர­மாக ஆட்­சி­யை கொண்­டு­சென்று அபி­வி­ருத்­தி­யை முன்­னெ­டுக்க முடி­யாது. அவ்­வாறு முன்­னெ­டுக் கப்­பட்ட நாடு­களின் சர்­வா­தி­கா­ ரி­களை மக்­களே விரட்­டி­ய­டித் தனர். ஆகவே ஜன­நா­ய­கமும் பொரு­ளா­தார வளர்ச்­சியும் ஒன்­றி­ ணைந்து கைகோர்த்து செல்ல வேண்டும். அவ்­வாறு இல்லாது ஒரு­போதும் நாட்­டை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது.


முன்­னைய ஆட்­சியில் இடம்­பெற்ற தவ­று­ களை நாம் செய்­யப்­போ­வ­தில்லை. ஜன­நா­யகம் முதன்மை பெற ­வேண்டும் என்றோ அல்­லது ஜன­நாயகம் இல்­லாது செயற்­பட வேண்டும் என்ற இரண்டு கருத்துமே தவறானது. பொருளாதார வளர் ச்சியும், ஜனநாயகமும் ஒன்றிணைந்து செயற் பட வேண்டும்.


அதேபோல் இயற்கையுடன் இணைந்த பொருளாதார வளர்ச்சியும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இயற்கையை அழித்து ஒரு நாடு வளர்ச்சிக்காண முடியாது. இறுதியில் அது சுடுகாடாக மாறும். எமது அரசா ங்கம் இதனை கவனமாக இனங்கண்டு வருவதாகவும் அவர் குறிப் பிட்டார்.
மக்­களை விரட்டி, நிலங்­களை கைப்­பற்றி, ஆக்­கி­ர­மிப்பு செய்து சர்­வா­தி­கா­ர­மாக ஆட்­சி மூலம் அபி­வி­ருத்­தி­யை முன்­னெ­டுக்க கூடாது. மக்­களை விரட்டி, நிலங்­களை கைப்­பற்றி, ஆக்­கி­ர­மிப்பு செய்து சர்­வா­தி­கா­ர­மாக ஆட்­சி மூலம் அபி­வி­ருத்­தி­யை முன்­னெ­டுக்க கூடாது. Reviewed by Madawala News on 12/16/2017 01:26:00 PM Rating: 5