Yahya

தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவு பட்டது ஏன்? விபரிக்கிறார் விக்னேஸ்வரன்.


தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கிடையில் உருவாகியிருக்கும் பிளவுநிலை தொடர்பாக, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தனது நிலைப்பாடு குறித்து தௌிவுபடுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

சுய நலம் மேலோங்கும் போது இவ்வாறான பிளவுகள் ஏற்படுவது வழக்கம். அதே சுயநலமே அந்தப் பிளவுகளைச் சரி செய்யவும் உதவும்.

1949ல் கொள்கை நிமித்தம் தந்தை செல்வா தமிழ்க் கொங்கிரசில் இருந்து பிரிந்தார். யுத்தம் முடிவடையும் தறுவாயில் சுயநலங் காரணமாக பிரபாகரனை விட்டு சிலர் வெளியேறினர். ஆகவே, பிளவுகள் கொள்கை நிமித்தமும் ஏற்படக் கூடும், சுயநல காரணங்களுக்காகவும் ஏற்படலாம்.

இன்றைய பிளவு நிலை எவ்வாறு ஏற்பட்டதென்பதை நீங்களே ஆய்தறிந்து கொள்ளுங்கள். அது அரசியல் அவதானியரின் வேலை.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தனது கொள்கைகளை எமது மக்களின் நெடுங்கால பாதுகாப்பிற்கும் அபிவிருத்திக்கும் வளர்ச்சிக்கும் ஏற்றவாறு மாற்றி, யாவரையும் உள்ளடக்கி ஒற்றுமையுடன் ஒரு பலமான அரசியல் கட்சியாகப் பரிணமிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு என, அவர் கூறியுள்ளார்.

கூட்டமைப்பின் பிளவு பற்றி வடக்கு முதல்வரின் நிலைப்பாடு இதுதான்
தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவு பட்டது ஏன்? விபரிக்கிறார் விக்னேஸ்வரன். தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவு பட்டது  ஏன்? விபரிக்கிறார் விக்னேஸ்வரன். Reviewed by Madawala News on 12/09/2017 08:48:00 AM Rating: 5