Yahya

இலங்கையில் பேசுபொருளான தலபூட்டுவா யானை கொலை.. பின்னணியில் பெளத்த தேரர் ??


தலபூட்டுவா யானையைக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேககிக்கப்படும் பொறியிலாளர் ஒருவரும்,தேரர் ஒருவரையும் தேடி ரகசியப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கல்கமுவ பிரதேச நீர்பாசன நிர்வாகப் பொறியியலாளரும்,பொல்பித்திகம பிரதேச விகாரை ஒன்றின் விகாராதிபதியையும் கைதுசெய்வதறகான விசாரணைகளை ரகசியப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முதலாம் மற்றும் இரண்டாம் சந்தேகநபர்களிடம் மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்கு அமையவே விகாராதிபதியும்,பொறியியலாரும் கைதுசெய்யப்படவுள்ளனர்.

அத்துடன் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் தம்மை கைதுசெய்வதைத் தடுப்பதற்கான நீதிமன்ற உத்தரவை கோரி நீதிமன்றில் மனு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தலபூட்டுவா யானை கொலை விகவாரம் தொடர்பில் இதுவரை 9 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன்,இதில் கிராம அலுவலர்கள் மூவரும் உள்ளடங்குகின்றனர்.
இலங்கையில் பேசுபொருளான தலபூட்டுவா யானை கொலை.. பின்னணியில் பெளத்த தேரர் ?? இலங்கையில் பேசுபொருளான தலபூட்டுவா யானை கொலை.. பின்னணியில் பெளத்த தேரர் ?? Reviewed by Madawala News on 12/14/2017 02:00:00 PM Rating: 5