Yahya

1992 இல் கடுகண்ணாவை மலையில் இருந்து தள்ளி மனைவியை கொன்ற போலிஸ்காரருக்கு தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டது.


மனைவியைக் கொன்று கடுகண்ணாவ மலை உச்சியிலிருந்து பள்ளத்தாக்கிற்கு தள்ளிவிட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு கேகாலை மேல் நீதிமன்ற நீதவான் தம்மிக்க கனேபொல மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

எம்பிலிபிட்டியதினேஷ் திலினதனுஷ்க (வயது 57) என்ற முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கே இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் குரு நாகலை வெஹர பொலிஸ் நிலையத்தில் மோப்பநாய் பிரிவில் பொலிஸ் கான்ஸ்டபிளாக கடமையாற்றிய அவர் போலி விவாக பதிவாளர் ஒருவர் முன்னிலையில் அவிசாவெளையைச் சேர்ந்த 28வயது பெண்ணொருவரை திருமணம் செய்து வாழ்ந்துவந்த நிலையில் 1992ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் திகதிக்கும் 27 ஆம் திகதிக்குமிடையே இவரது மனைவி கடுகண்ணாவ பள்ளத் தாக்கில் சடலமாக மீட்கப்பட்டார்.

இது குறித்து பொலிஸார் விசாரணை களை மேற்கொண்ட போது இப்பெண் ணுக்கு மரணத்தை உண்டு பண்ணி மலை உச்சியிலிருந்து பள்ளத்தாக்கிற்கு புரட்டி விடப்பட்டுள்ளதாக தெரியவந்ததைய டுத்து சந்தேகத்தின் பேரில் அப்பெண்ணின் கணவரான பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.

ஆரம்ப நீதிமன்ற விசாரணையின் பின்னர் சட்டாமா அதிபரால் விசாரணைக்கு சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இறுதியில் இவருக்கு மரண தண்டனை விதிக்கபட்டது.
1992 இல் கடுகண்ணாவை மலையில் இருந்து தள்ளி மனைவியை கொன்ற போலிஸ்காரருக்கு தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1992 இல் கடுகண்ணாவை மலையில் இருந்து தள்ளி மனைவியை கொன்ற போலிஸ்காரருக்கு தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டது. Reviewed by Madawala News on 12/15/2017 12:09:00 PM Rating: 5