Kidny

Kidny

டீசலில் தண்ணீர் கலந்துள்ளதாக பொலிஸில் முறைப்பாடு. மழையை குற்றம் சாட்டிய எரிபொருள் நிலைய முகாமையாளர்.


யாழ் - கொக்குவில் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வழங்கப்பட்ட டீசலில் தண்ணீர் கலந்துள்ளதாக, இன்று கொக்குவில் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

பொலிஸார் அங்கு சென்று குறித்த டீசல் மாதிரிகளைப் பெற்று, அதனை உரிய முறையில், பரிசோதனை செய்து அறிக்கை பெற்றுக் கொள்ளும் வரை, குறித்த எரிபொருள் நிலையத்தில் டீசல் விநியோகிகக் தடை விதிக்கப்பட்டுள்ளது என, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அங்கு டீசல் நிரப்பி, எடுத்துச் செல்லப்பட்ட டக்டர்கள், பழுதடைந்து வயல் பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, சாரதிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், டீசல் பெற்றுக் கொள்ள வாகனங்களை நிறுத்தி வைத்திருந்த சாரதிகள் மற்றும் குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளருக்கும் இடையில் இன்று கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, இதில் தலையிட்ட சிலர் பிரச்சினையை சுமூகநிலைக்கு கொண்டு வந்துள்ளதோடு, பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கியுள்ளனர்.

இதேவேளை அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக, எரிபொருள் தாங்கிக்குள் மழை நீர் வழிந்திருக்காலம் என, குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
டீசலில் தண்ணீர் கலந்துள்ளதாக பொலிஸில் முறைப்பாடு. மழையை குற்றம் சாட்டிய எரிபொருள் நிலைய முகாமையாளர்.  டீசலில் தண்ணீர் கலந்துள்ளதாக பொலிஸில் முறைப்பாடு. மழையை குற்றம் சாட்டிய எரிபொருள் நிலைய முகாமையாளர். Reviewed by Madawala News on 12/03/2017 02:50:00 PM Rating: 5