Yahya

கூட்டு எதி­ர­ணியினரின் நிபந்­த­னைகள் ரிஜக்டட்.. ஒரு போதும் அவர்களுடன் இணைய மாட்டோம்.


புதிய அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிக்கும் பணி­களை கைவி­டு­வ­தாக ஜனா­தி­பதி உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்தால் மட்­டுமே சுதந்­திரக் கட்­சி­யுடன் இணைந்­து­கொள்­வ­தாக கூட்டு எதி­ரணி நிபந்­தனை விதித்­தது.

அதனை, எம்மால் ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தென கூறி­விட்டோம். அத­னா­லேயே கூட்டு எதி­ர­ணிக்கு எம்­முடன் இணை­ய­மு­டி­யாமல் போனது என்று சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பேச்­சா­ளரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான டிலான் பெரேரா தெரி­வித்தார்.

அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான சந்­தர்ப்­பத்தை கைவிட்டு மீண்டும் இன­வா­தத்­தைக்­கொண்டு இந்த நாட்டை அழிப்­ப­தற்கு நாங்கள் தயா­ரில்லை. அத­னா­லேயே எங்­களால் கூட்டு எதி­ர­ணி­யுடன் உடன்­பட முடி­ய­வில்லை. அத்­துடன் கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்தர் பஷில் ராஜ­ப­க்ஷ­வுக்கு ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் ஒரு டீல் இருக்­கி­றது. அதனால் அவரும் அதனை விரும்­ப­வில்லை என்றும் டிலான் பெரேரா சுட்­டிக்­காட்­டினார்.

சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் கூட்டு எதி­ர­ணியும் இணைந்து தேர்­தலில் போட்­டி­யிட முடி­யாமல் போனமை தொடர்­பாக வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

சுதந்­தி­ரக்­கட்­சியின் பேச்­சாளர் டிலான் பெரேரா இது­தொ­டர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்: நாங்கள் இந்த நாட்­டுக்கு புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்றை கொண்­டு­வரும் நோக்­கி­லேயே ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்தோம்.

நீண்­ட­கால தேசிய பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்­வொன்றைக் காண்­ப­தற்கு தற்­போது சிறந்த சந்­தர்ப்பம் கிடைத்­தி­ருக்­கி­றது. அந்த சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்தி புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வர நாங்கள் முயற்­சிக்­கும்­போது அதற்குப் பல தடைகள் ஏற்­பட்­டன.

 அந்த தடை­களை தாண்டி நாங்கள் அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வர முயற்­சிக்கும் இந்த சந்­தர்ப்­பத்தில் எம்­முடன் இணைந்து தேர்­தலில் போட்­டி­யிட கூட்டு எதி­ரணி கடு­மை­யான நிபந்­தனை ஒன்றை முன்­வைத்­துள்­ளது. அதா­வது புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சியை கைவி­டு­வ­தாக ஜனா­தி­பதி உத்­தி­யோ­கப்­பூர்­வ­மாக தெரி­வித்தால் மட்­டுமே சுதந்­தி­ரக்­கட்­சி­யுடன் இணைய முடியும் என கூட்டு எதி­ரணி நிபந்­தனை முன்­வைத்­தது.

அதற்கு எம்மால் ஒரு­போதும் இணங்க முடி­யாது. அதனால் நாங்கள் புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வ­ரு­வ­தற்கு காணப்­ப­டு­கின்ற சந்­தர்ப்­பத்தை இழக்க முடி­யாது எனக் கூறி­விட்டோம். இதன் கார­ண­மாக சுதந்­தி­ரக்­கட்­சிக்கும் கூட்டு எதி­ர­ணிக்கும் இணைய முடி­யாமல் போயி­ருக்­கி­றது.

இதனால் நாங்கள் தனித்து தேர்­தலில் போட்­டி­யிடும் நிலைமை ஏற்­பட்­டது. இது ஒரு ஆபத்­தான தீர்­மானம் என்­பது எமக்குத் தெரியும். ஆனால் மீண்டும் அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை கொண்­டு­வ­ரு­வ­தற்­கான சந்­தர்ப்­பத்தை இழந்து மீண்டும் இன­வா­தி­களின் குகைக்குள் நாட்டை தள்­ளி­வி­டு­வ­தற்கு நாங்கள் விரும்­ப­வில்லை. ஒரு­வேளை எமக்கு தேர்­தலில் இலக்­கங்­களைப் பொறுத்­த­வ­ரையில் பாத­க­மான நிலைமை ஏற்­பட்­டாலும் அது தற்­கா­லி­க­மா­ன­தா­கவே இருக்கும்.

மாறாக அது நீண்­ட­கா­லத்­திற்கு எம்மை பாதிக்­காது. அர­சி­ய­ல­மைப்பு முயற்­சியை கைவிட்டு கூட்டு எதி­ர­ணி­யி­லி­ருக்­கின்ற சில இன­வா­தி­களின் கோரிக்­கைக்கு நாங்­கள செவி­சாய்த்தால் அதுவே மிகப்­பெ­ரி­ய­தொரு அநி­யா­ய­மாக அமையும். அந்த அநி­யா­யத்தை இந்த நாட்­டுக்கு செய்­வதை நாங்கள் விரும்­ப­வில்லை. மறு­புறம் ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்­சி­யுடன் இணைந்து ஆட்சி நடத்­து­வது என்­பது இல­கு­வான காரி­ய­மல்ல.

நல்­லாட்­சி­யா­னது முற்­று­மு­ழுதும் ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யி­னு­டை­யது என்று நினைத்­துக்­கொண்டே அக்­கட்­சி­யினர் ஆட்சி நடத்­து­கின்­றனர். எமது பொரு­ளா­தார கொள்­கை­க­ளுக்கு எமக்கு இட­மில்லை. இதனால் நாங்கள் சில நேரங்­களில் அதி­ருப்­யு­று­கிறோம். ஆனால் தேசியப் பிரச்­சி­னையைத் தீர்த்து புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வரும் நோக்கில் பொறு­மை­யாக இருக்­கிறோம். அவ்­வாறு நாங்கள் தேசிய நோக்­கத்­திற்­காக செயற்­ப­டும்­போது அர­சி­ய­ல­மைப்பே வேண்­டா­மென கூட்டு எதி­ரணி கூறு­வதை ஏற்க முடி­யாது.

மறு­புறம் கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்­த­ரான பஷில் ராஜ­பக்ஷ ஐக்­கிய தேசி­யக்­கட்­சி­யுடன் டீல் வைத்­தி­ருப்­பது எமக்கு தெரியும். அதனால் அவர் இரண்டு தரப்­புக்­களும் இணை­வதை தடுத்­துக்­கொண்­டி­ருக்­கின்றார். அது­மட்­டு­மன்றி கூட்டு எதி­ர­ணியில் இருக்­கின்ற ஒரு­சில இளம் அர­சி­யல்­வா­தி­களும் இவ்­வாறு இணை­வதை விரும்­பாமல் இருக்­கின்­றனர். அவற்­றுக்கு என்ன காரணம் என்று எமக்குத் தெரியும்.

ஆனால் ஜனாதிபதி தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஒரு முக்கியமான நிலைப்பாட்டில் இருக்கிறது. அதாவது இந்தத் தேர்தலுக்காக நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்பை கொண்டுவருவதற்கான சந்தர்ப்பத்தை இழந்து இனவாதிகளுக்கு வலுவூட்ட விரும்பவில்லை. மக்கள் எங்களுடன் இருக்கின்றார்கள் என்றும் எமது கொள்கை என்னவென்பதை தெரிந்திருக்கிறார்கள் என்றும் நாங்கள் நம்புகின்றோம். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தேர்தலில் களம் இறங்குகிறோம் என்றார்.

கூட்டு எதி­ர­ணியினரின் நிபந்­த­னைகள் ரிஜக்டட்.. ஒரு போதும் அவர்களுடன் இணைய மாட்டோம். கூட்டு எதி­ர­ணியினரின் நிபந்­த­னைகள் ரிஜக்டட்.. ஒரு போதும் அவர்களுடன் இணைய மாட்டோம். Reviewed by Madawala News on 12/09/2017 11:02:00 AM Rating: 5