Yahya

மடவளை அரச பொது மருத்துவ நிலையம். அரச அனுசரணை துஷ்பிரயோகம்! தொடரும் அவலம்.




ஊரிலுள்ள சகலருக்கும்....
(முக்கியமாக அரசியல்வாதிகளுக்கும் சேர்த்து. முடிந்தால் இதற்கு உங்கள் பங்களிப்பை செய்து வாக்குகளை
தக்கவைத்துக்கொள்ளுங்கள்.)

மூன்று மருத்துவர்கள் பணியாற்றிய எமது மருத்துவ நிலையம் இன்று தனியொரு மருத்துவரைக் கொண்டு இயங்கி வருகிறது.

இருப்பினும் முன்னறிவித்தலின்றி நடைபெறும் வைத்தியர்களின் வேலை நிறுத்தம் மற்றும் பணியில் இருக்கும் குறிப்பிட்ட வைத்தியர் அடிக்கடி வருகை தராமை நோயாளர்களை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்கியுள்ளது.

•இந்த மாதம் இரண்டு (மாதாந்த) கிளினிக்குகள் வைத்தியர்கள் வருகை தராததினால் நோயாளர்களுக்கு மாதாந்தம் தேவையான மருந்துகள் கிடைக்கவில்லை.

நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள இம் மத்திய சுகாதார நிலையத்தின் பயனை பொதுமக்கள் பெறமுடியாதவாறு பாத்தும்பர சுகாதார பிரிவால் கவணிப்பின்றி கைவிடப்பட்டுள்ள நிலமையை அவதாணிக்க முடிகிறது.

இது பற்றி சம்பந்தப்பட்டவர்களுக்கு பல முக்கியஸ்தர்கள் ஊடாகவும், நேரிடையாகவும் (எழுத்து மூலமும்) அறிவித்தல் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே மக்கள் நலன் கருதி சுகாதார திணைக்களத்தின் கவனத்தை ஈர்த்து எமது பிரச்சனைக்கு தீர்வுகாண ஜனநாயக ரீதியில் "உரிமைப்போராட்டம்" செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதை ஊர் மக்களுக்கு இத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

சுல்பி சமீன்,
16-12-2017
மடவளை அரச பொது மருத்துவ நிலையம். அரச அனுசரணை துஷ்பிரயோகம்! தொடரும் அவலம். மடவளை அரச பொது மருத்துவ நிலையம். அரச அனுசரணை துஷ்பிரயோகம்! தொடரும் அவலம். Reviewed by Madawala News on 12/16/2017 01:57:00 PM Rating: 5