Yahya

துபாயில் இலங்கையர் ஒருவருக்கு ஆயுட்கால சிறைத் தண்டனை தீர்ப்பு.


துபாயில்  வசிக்கும் இலங்கையர் ஒருவருக்கு அந்த நாட்டு நீதிமன்றத்தால் ஆயுட்கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு நத்தார் பண்டிகையன்று ஏற்பட்ட மோதல் ஒன்றின் போது இடம்பெற்ற கொலைச் சம்பவத்திற்காக 2017 நத்தார் தினத்தன்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

36 வயதுடைய குறித்த இலங்கை பிரஜைக்கு எதிராக கொலை மற்றும் போதைவஸ்து பயன்படுத்தல் போன்ற குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

கடந்த நத்தார் தினத்தன்று வீட்டில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வின் போது வீட்டுக்கு வந்திருந்த பழைய நண்பர் ஒருவருடன் ஏற்பட்ட மோதலால், சந்தேகநபர் அந்த நண்பரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து கொலைச் சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றிருந்த நிலையில் பின்னர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர், உயிரிழந்த நபர் சந்தேகநபருடன் ஒரே விடுதியில் தங்கியிருந்துள்ளதுடன், பணப் பிரச்சினையே கொலைக்கு காரணம் என்று விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
துபாயில் இலங்கையர் ஒருவருக்கு ஆயுட்கால சிறைத் தண்டனை தீர்ப்பு. துபாயில் இலங்கையர் ஒருவருக்கு ஆயுட்கால சிறைத் தண்டனை தீர்ப்பு. Reviewed by Madawala News on 12/28/2017 10:03:00 PM Rating: 5