Yahya

அட்டாளைச்சேனை சியாம் மர்சூக் உயிரிழப்பு.. (வேட்புமனு தாக்கலை அடுத்து கைகலப்பும் பதிவாகியுள்ளது)



அட்டாளைசேனை சியாம் மர்சூக் என்பவர்  மரணமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும்
செய்திகள் தெரிவித்தன.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் இறக்காமம், வரிப்பத்தான்சேனை ஹோட்டல் ஒன்றினுள் இடம்பெற்ற வாய்த்தகர்க்கம் கைகலப்பாக மாறியுள்ள நிலையில் அங்கிருந்து அட்டாளைச்சேனையில் தனது இல்லத்திற்கு  சென்ற சியாம் மர்சூக் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

உயிரிழந்த நபர் அட்டாளைச்சேனை பகுதியை சேர்ந்த மர்சூக் சியாம் என்பவர் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர் அவர்களின் மைத்துனர்  என்றும் தெரியவருகிறது.
அட்டாளைச்சேனை சியாம் மர்சூக் உயிரிழப்பு.. (வேட்புமனு தாக்கலை அடுத்து கைகலப்பும் பதிவாகியுள்ளது) அட்டாளைச்சேனை சியாம் மர்சூக் உயிரிழப்பு..  (வேட்புமனு தாக்கலை அடுத்து கைகலப்பும் பதிவாகியுள்ளது) Reviewed by Euro Fashions on 12/14/2017 08:55:00 PM Rating: 5