Yahya

எஸ்பெஸ்டஸ் தடை நீக்கம்.. ஜனாதிபதிக்கு நாமல் ராஜபக்ஷவின் கிண்டல் கேள்விகள்.



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எஸ்பெஸ்டஸ் தடையை நீக்கியமை ஏன் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்
ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் தனது டுவிட்டர் வளைத்தளத்தில் இன்று (21)  பதிவிட்டுள்ளார்.

ஜனாதிபதிக்கு சுகாதார நலன் தொடர்பில் அவதானம் இல்லாமல் போய்விட்டதா அல்லது இலங்கையின் வெளிநாட்டு மற்றும் வர்த்தக கொள்கைகள் தவறிவிட்டதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

“தாம் சுகாதார அமைச்சராக பதவி வகித்த காலத்திலேயே எஸ்பெஸ்டோஸ் கூரைத்தகடுகளுக்கு, தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைளை முன்வைத்தாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னர் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறாயின் தற்போது அதற்கு விதிக்கப்பட்ட தடையினை நீக்க தீர்மானித்ததற்காக காரணம் என்ன. சுகாதார நலன் குறித்து அக்கரை செலுத்துவதை  நிறுத்தி விட்டாரா? எனவும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.




எஸ்பெஸ்டஸ் தடை நீக்கம்.. ஜனாதிபதிக்கு நாமல் ராஜபக்ஷவின் கிண்டல் கேள்விகள். எஸ்பெஸ்டஸ் தடை நீக்கம்.. ஜனாதிபதிக்கு நாமல் ராஜபக்ஷவின் கிண்டல் கேள்விகள். Reviewed by Madawala News on 12/21/2017 02:45:00 PM Rating: 5