Yahya

மீன்பிடிப்பதைப் பார்க்கச் சென்ற சிறுவன் முகம்மத் பாதிலை (12) காணவில்லை.


-அப்துல் சலாம் யசீம் -

ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்மலை, கோணாவ குளத்தில் மீன்பிடிப்பதைப் பார்க்கச் சென்ற திருகோணமலை, மட்கோ பகுதியைச் சேர்ந்த 12 வயதுச் சிறுவன் முத்தலிப் முகம்மத் பாதில் என்பவரை காணவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.


கோணாவ குளத்தில் மீன்பிடிப்பதற்காக நேற்று (19) இருவர் சென்ற நிலையில் குறித்த சிறுவனும் அவர்களுடன் சென்றுள்ளான் எனத் தெரியவருகின்றது.


குளத்தின் கரையில் இருந்த சிறுவனை, முதலை பிடித்திருக்கலாமென, பிரதேச மக்கள் சந்தேகிக்கின்றனர்.

சிறுவனைத் தேடும் நடவடிக்கையில், ஹொரவ்பொத்தானை பொலிஸாரும் பிரதேசவாசிகளும் ஈடுபட்டுள்ளனர்.
மீன்பிடிப்பதைப் பார்க்கச் சென்ற சிறுவன் முகம்மத் பாதிலை (12) காணவில்லை. மீன்பிடிப்பதைப் பார்க்கச் சென்ற சிறுவன் முகம்மத் பாதிலை (12) காணவில்லை. Reviewed by Madawala News on 12/20/2017 01:35:00 PM Rating: 5