Kidny

Kidny

தற்போதைய சீரற்ற காலநிலை மற்றும் காலநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணம் படிம எரிபொருளே (fossil fuel)


தற்போதைய சீரற்ற காலநிலை மற்றும் காலநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணம் படிம எரிபொருளே
(fossil fuel) என்று மாநாக மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேவிபாலிகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,

மானிட சமூகம் இன்று பாரிய நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றது. சுற்றாடல் மாசடைதல் இதில் முக்கிய விடயமாகும். நமது நாட்டில் ஒருபகுதியில் பலவருடகாலமாக வறட்சி நிலவிவருகின்றது. மற்றொரு பிரதேசத்தில் வெள்ளம் , கடலில் சூறாவளிக்காற்று ஆகியவற்றை எதிர்கொள்கின்றோம். இதனால் நாம் நாளாந்தம் பெரும் அனர்த்தங்களை எதிர்கொள்கின்றோம்.

இதேபோன்று கடல்நீர்மட்டமும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. சில நாடுகள் கடல்நீரிலில் மூழ்கின்றன. சில உயிரினங்கள் அழிகின்றன. வேறு சில உயிரினங்கள் வெகுவிரைவாக உருவாகின்றன.

இவற்றிற்கு முக்கிய காரணம் உலகின் வெப்பநிலை அதிகரிப்பதே ஆகும். இந்த வெப்பநிலை அதிகரிப்பதற்கு காரணம் உலகமக்களின் செயற்பாடுகளே ஆகும். இதனை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். சில நாடுகள் இதனை ஏற்றுக்கொள்ள தயங்குகின்றன என்று குறிப்பிட்டார்.

பயணங்களுக்கான போக்குவரத்து விண்ணில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் , சூரிய தாக்கத்தினால் ஏற்படக்கூடிய தழும்புகள் ஆகியன தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இருப்பினும் சுற்றாடலில் காலநிலை மாற்றத்திற்கு காரணம் படிம எரிபொருளே ஆகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
தற்போதைய சீரற்ற காலநிலை மற்றும் காலநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணம் படிம எரிபொருளே (fossil fuel)  தற்போதைய சீரற்ற காலநிலை மற்றும் காலநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணம் படிம எரிபொருளே (fossil fuel) Reviewed by Madawala News on 12/07/2017 11:51:00 AM Rating: 5