Yahya

மைத்திரி தலைமையிலான சுதந்திரக்கட்சி இம்முறை அக்குறணை பிரதேச சபையை கைப்பற்றும். சிம்சான்



மொஹொமட்  ஆஸிக்) 

 அக்குறணை பிரதேச சபையை இம் முறை  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ன்னி கைப்பற்றும் என்று  அக்குறணை ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி அமைப்பாளரும் முன்னால் தலைவருமான ஏ.எம்.எம். சிம்சான் தெரிவித்தார்.


அக்குறணை பிரதேச சபைக்காக  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ன்னியின் சார்பில்  கட்டுப் பணத்தை இன்று 16 ம் திகதி  கண்டி மாவட்ட செயலகத்தில் கட்டிய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.


இங்கு  மேலும் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறும் தெரிவித்தார்.


க்குறணை  பிரதேச சபைக்காக  நாங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி சார்பில் போட்டியிடுகினறோம். எங்களுடன் மிகவும் சக்திமிக்க வேடபாளர்கள் இருக்கின்றனர். ஆகவே இம்  முறையும்  அக்குறணை பிரதேச சபையை  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ன்னி கைப்பற்றும் ‘. ஜனாதிபதி அவர்களுடைய தலைமத்துவத்தை எமது மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அவரின் ஆட்சியை  நிலையாக கொண்டு செல்வதற்கு உதவவும் முன் வந்துள்ளனர்.


ஐக்கிய தேசிய  கட்சியுடன் நல்லாட்சி இடம் பெற்று வருகின்றது. அக் கட்சி எமக்கு எவ்வித தடையும் இல்லை என்றும் அவர் இங்கு தெரிவித்தார்.

மைத்திரி தலைமையிலான சுதந்திரக்கட்சி இம்முறை அக்குறணை பிரதேச சபையை கைப்பற்றும். சிம்சான் மைத்திரி தலைமையிலான சுதந்திரக்கட்சி இம்முறை அக்குறணை பிரதேச சபையை கைப்பற்றும். சிம்சான் Reviewed by Euro Fashions on 12/17/2017 11:55:00 AM Rating: 5