Yahya

கண்டி பிரதேசத்தில் ரெண்ட் காரில் கிராமங்களுக்கு பகட்டாக பயணம் செய்து இலட்சக்கணக்கில் மோசடி செய்தவர் கைது.


 (மொஹொமட்  ஆஸிக்)
வாடகை அடிப்பையில் பெற்ற  மோட்டார் வாகனத்தில் பகட்டாக  பயணித்து கிராமங்களுக்கு சென்று ,
 குறைந்த விலையில் முச்சக்கர வண்டிகளை பெற்றுத் தருவதாக கூறி கிராம  மக்களை  ஏமாற்றி பல இலட்சம் ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரை கட்டுகஸ்தோட்டை பொலீஸார்  கைது செய்துள்ளனர்.


 கண்டி பிரதேசத்தில்  தனியார் நிறுவனம் ஒன்றில் இருந்து வாடகைக்கு மோட்டார் வாகனம் ஒன்றை பெற்று பகட்டாக பயணித்த  இவர் கண்டி ஹுலுகங்கை பிரதேசத்திற்கு சென்று தான் கண்டியிலுள்ள பிரபல நிதி நிறுவனம் ஒன்றில் இருந்து வருவதாகவும், குறைந்த விலையில் முச்சக்கர வண்டிகளை பெற்றுத் தர முடியும் என்றும் கூறியுள்ளார்.


  இதன் அடிப்படையில் ஒரு இலட்சம் ரூபாய் வீதம்  செலுத்தி  முச்சக்கர வண்டிகளை பெற்றுக் கொள்ள இருவர் முன் வந்துள்ளனர்.


அடுத்த நாள் அங்கு சென்றுள்ள இவர் இவ் இருவரையும் பணத்துடன் மோட்டார் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு  கண்டி நகருக்கு அன்மையில் உள்ள குறித்த நிதி நிறுவனத்துற்கு  அருகில் சென்று அங்கு நிறுத்தி வைக்கப்ப்ட்டிருந்த இரு முச்சக்கர வண்டிகளை  கான்பித்து பின்  மிகவும் சூசகமான முறையில்  அவர்களிடம் இருந்த பணத்தை பெற்றுக் கொண்டு அரைகளை இடையில் வாகனத்தில் இருந்து இறக்கிவிட்டுச் சென்றுள்ளார்.


பின்னர் இதுதொடர்பில் பொலீஸில் முறைப்பாடு செய்துள்ளதுடன் போலீஸார் மேற்கொண்ட விசாரணையின் போது கொழும்பு பிரதேசத்திற்கு தப்பிச் சென்றிருந்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.


இச் சந்தேக நபர் இவ்வாறு இன்னும் பலரிடம் பணமோசடி செய்திருக்கலாம் என்று பொலீஸார் நம்புகின்றனர். இது இதாடர்பில் மேலதிக விசாரணைகளை  கட்டுகஸ்தோட்டை பொலீஸார் மேற்கொண்டுள்ளதுடன், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை கண்டி நீதவான் முன் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

2017 12 30  ஆஸிக்

கண்டி பிரதேசத்தில் ரெண்ட் காரில் கிராமங்களுக்கு பகட்டாக பயணம் செய்து இலட்சக்கணக்கில் மோசடி செய்தவர் கைது. கண்டி பிரதேசத்தில்  ரெண்ட் காரில் கிராமங்களுக்கு  பகட்டாக  பயணம் செய்து இலட்சக்கணக்கில் மோசடி செய்தவர் கைது. Reviewed by Madawala News on 12/31/2017 10:59:00 AM Rating: 5