Yahya

(ஹைலைட் வீடியோ இணைப்பு) பிரீமியர் லீக் போட்டியில் 18 சிக்சர்கள் (146 ரன்கள்) அடித்து கிரிஸ் கெயில் சாதனை.


பங்களாதேஷ்  டாக்கா நகரில் பங்களாதேஷ்  பிரீமியர் லீக் போட்டிகள் நடந்து வருகின்றன.  ரங்பூர் ரைடர்ஸ் மற்றும் டாக்கா டைனமைட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடந்தது.

இந்த போட்டியில் ரங்பூர் ரைடர்ஸ் அணியில் விளையாடிய கெயில் 69 பந்துகளில் 146 ரன்கள் குவித்துள்ளார்.  டி20 கிரிக்கெட் போட்டியில் 11 ஆயிரம் ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.  பிரெண்டன் மெக்கல்லம் 309 போட்டிகளில் விளையாடி 8 ஆயிரத்து 526 ரன்கள் எடுத்து அவருக்கு அடுத்த நிலையில் உள்ளார்.

தொடர்ந்து, டி20 போட்டியில் 20 சதங்களை அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் கெயில் பெற்றுள்ளார்.  இந்த  போட்டியில் 18 சிக்சர்கள் அடித்து அவர் சாதனை படைத்துள்ளார்.  மற்றும் 5 பவுண்டரிகளும் அடித்துள்ளார்.  மேற்கிந்திய தீவுகள் அணிக்காக டி20 போட்டியில் 2 சதங்களை அவர் அடித்துள்ளார்.

டி20 கிரிக்கெட் போட்டியில் அவர் 819 சிக்சர்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார்.  வங்காளதேச பிரீமியர் லீக் போட்டியில் 100 சிக்சர்கள் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

இந்த போட்டியில் கெயில் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஷகீப் அல் ஹசன் தனக்கு கிடைத்த கேட்ச் வாய்ப்பினை நழுவ விட்டார்.  இதனை தொடர்ந்து மெக்கல்லம் உடன் இணைந்து 201 ரன்களை கெயில் சேர்த்துள்ளார்.  ரங்பூர் ரைடர்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது.
(ஹைலைட் வீடியோ இணைப்பு) பிரீமியர் லீக் போட்டியில் 18 சிக்சர்கள் (146 ரன்கள்) அடித்து கிரிஸ் கெயில் சாதனை. (ஹைலைட் வீடியோ இணைப்பு) பிரீமியர் லீக் போட்டியில் 18 சிக்சர்கள் (146 ரன்கள்) அடித்து கிரிஸ் கெயில் சாதனை. Reviewed by Madawala News on 12/12/2017 11:20:00 PM Rating: 5