Kidny

Kidny

2020 இல் நாட்டின் தலைவராக கோத்தபாய.. கருத்துக்கணிப்பை மறுக்கிறது கொழும்பு பல்கலைக்கழகம்.



2020 ஆம் ஆண்டு யார் இலங்கையின் தலைவராக வருவார் என்ற வகையில் எவ்விதமான ஆய்வையும் கருத்துக்கணிப்பையும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடகப் பிரிவு மேற்கொள் ளவில்லை என்றும் அதுதொடர்பில் பல்கலைக்கழ கத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லையென்றும் தாம் எந்தப் பொறுப்பையும் ஏற்க மாட்டோம் என்றும் கொழும்பு பல்கலைக்கழகத் தின் கலைப்பீட ஊடகத்துறைப் பிரிவு தெரிவித் திருக்கின்றது.


கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடகப்பிரிவு நடத்திய கருத்துக்கணிப்பொன்றில் 2020 ஆம் ஆண்டில் இந்த நாட்டின் தலைவராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவு செய்யப்படுவார் என்று நேற்று வெளியான வார இறுதி சிங்களப் பத்திரிகையொன்றில் (மவ்பிம) செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

 அது தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடகப் பிரிவு விடுத் துள்ள அறிக்கையிலேயே இந்த விடயங்கள் குறிப் பிடப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் ஊடகப்பிரிவின் இணைப்பாளர் பேராசிரியர் சமந்த ஹேரத் கையொப்பமிட்டு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது,

குறித்த அறிக்கையில் வெளியி டப்பட்டுள்ளவாறு எவ்விதமான கருத்துக்கணிப் பையும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஊடகப் பிரிவு செய்யவில்லை.

இவ்வாறு கொழும்பு பல் கலைக்கழகம் கருத்துக்கணிப்பை நடத்தியதாக, செய்தியை வெளியிடுவதன் மூலம் வாசகர்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர்.

எந்தவொரு நபரும் ஆய்வொன்றை நடத்துவதும் அதனை பிரசுரிப்பதற்கும் உரிமையைக் கொண் டிருக்கிறார். ஆனால் அவ்வாறானதொரு கருத் துக்கணிப்பை கொழும்புப் பல்கலைக்கழகத்தின்
ஊடகப்பிரிவு செய்திருந்தால் அதனை கொழும்பு பல்கலைக்கழகம் செய்ததாக கூறுவது வேறுபட்ட அர்த்தத்தைக் காட்டும்.

இந்த செய்தி வெளியானதன் பின்னர் இவ்வாறானதொரு கருத்துக்கணிப்பை கொழும்பு பல்க லைக்கழகத்தின் ஊடகப் பிரிவு முன்னெடுத்ததா என்று பலர் என்னிடம் கேட்கின்றனர். ஆனால் அது தொடர்பில் எம்மை யாரும் தெளிவுபடுத்த வில்லை.

அதனால்தான் இதுதொடர்பில் தெளிவுப டுத்தும் நோக்கில் இந்த அறிக்கையை நான் வெளி யிடுகின்றேன்.

அந்தவகையில் 2020 ஆம் ஆண்டு தலைவர் யார் என்றவகையில் கொழும்பு பல்கலைக்கழகம் கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளதாக வெளிவந் துள்ள செய்தி பொய்யானது என்பதை தெரிவித் துக்கொள்கின்றேன்.

இந்த விடயத்துடன் கொழும்பு பல்கலைக்கழகமோ அல்லது ஊடகப்பிரிவோ எந்தவகையிலும் சம்பந்தப்படவில்லை.

2020 இல் நாட்டின் தலைவராக கோத்தபாய.. கருத்துக்கணிப்பை மறுக்கிறது கொழும்பு பல்கலைக்கழகம். 2020 இல் நாட்டின் தலைவராக கோத்தபாய.. கருத்துக்கணிப்பை மறுக்கிறது   கொழும்பு பல்கலைக்கழகம். Reviewed by Madawala News on 12/04/2017 09:07:00 AM Rating: 5