Yahya

கண்டி மடவளை ஹில்கன்டறி சர்வதேச பாடசாலை முன்பள்ளி சிறார்களின் பட்டமளிப்பு விழா.

கண்டி மடவளை ஹில்கன்டறி சர்வதேச பாடசாலை முன்பள்ளி சிறார்களின் பட்டமளிப்பு விழா,தரம் 3,4,5 மாணவர்களின் ஆங்கிலத் தினப்போட்டி பரிசளிப்பு வைபவம் 2017.

கண்டி மடவளை ஹில்கன்டறி சர்வதேச பாடசாலை முன்பள்ளி சிறார்களின் பட்டமளிப்பு விழாவும்,தரம் 3,4,5 மாணவர்களின் நடைபெற்று முடிந்த ஆங்கிலத் தினப்போட்டி பரிசளிப்பு நிகழ்வும் கடந்த 09.12.2017 அன்று பி.ப 2.00 மணிக்கு  அஷ்ரப் கேட்போர் கூடத்திலே கல்லூரி அதிபர் ஜனாப் A.A.M. ஜாஸில் அவர்களின் தலைமையின் கீழ் வெகு சிறப்பாக நடைப்பெற்று முடிந்தது.


இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக தலைமை பொறியியலாளர் , இலங்கை மின்சார சபை  , கண்டி  திருமதி. எம்.எம்.என்.முனவ்வரா மற்றும் கெளரவ அதிதியாக ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் திரு. கங்கொடஅவர்களும் கலந்து சிறப்பித்தனர்.


இவர் தனது உரையின் போது மாணவ, மாணவிகளின்  திறமைகளை சுட்டிக்காட்டியதுடன் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் ,பாடசாலையின் வளர்ச்சிக்காக அயராது உழைக்கும் அதிபரையும் வெகுவாகப் பாராட்டினார்.
இவ்விழாவில் முன்பள்ளி சிறார்கள் தமது முன்பள்ளிக் கல்வியை பூர்த்திசெய்தமைக்காக சான்றிதள்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன், நடைபெற்று முடிந்த தரம் 3,4,5 ஆங்கிலத் தினப்போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களிற்கான சான்றிதள்களும் வழங்கப்பட்டன.


மேலும் பெற்றோர்கள் சிலர் தமது அனுபவங்களையும்,கருத்துக்களையும் மேடையில் பகிர்ந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க  நிகழ்வாகும்.

இவ்விழாவின் போது பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் சில

கண்டி மடவளை ஹில்கன்டறி சர்வதேச பாடசாலை முன்பள்ளி சிறார்களின் பட்டமளிப்பு விழா. கண்டி மடவளை ஹில்கன்டறி சர்வதேச பாடசாலை முன்பள்ளி சிறார்களின் பட்டமளிப்பு விழா. Reviewed by Madawala News on 12/20/2017 04:20:00 PM Rating: 5