Yahya

சவூதியில் நெகிழ வைத்த சம்பவம்.... உங்கள் ஊரில் நீங்களும் பண்ணலாமே.


உங்கள் ஊரிலுள்ள பலசரக்கு கடையில்,யாரோ ஒரு ஏழையின் கடனை இப்படியும் தீர்க்கலாமே.
ரமழானில் அவர்களாக வாசலுக்கு வருவதை கொஞ்சமேனும் தடுத்தவராய் ஆகலாம்.

 சவூதி அரேபியாவிலுள்ள கடை ஒன்றிற்கு இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஒருவர் வருகிறார். கடைக்காரரிடம் அந்த இஸ்லாமிய அறிஞர் உங்கள் கடையில் ஏழைகள்  வறுமையாளிகள் யாரேனும் கடன் வைத்துள்ளார்களா என்று கேட்கிறார்.

 கடைக்காரர் நோட்டை பார்த்து ஒரு ஏழை பெண்மணி 450 ரியால் கடன் வைத்துள்ளார் என்கிறார்.

அப்படியென்றால் அந்த கடனை நான் அடைத்து விடுகிறேன் என்று அந்த பணத்தை கொடுக்கிறார்.

பணத்தை கொடுத்த பிறகு அந்த ஏழை பெண்ணின் மொபைல் நம்பரை பெற்று உங்களது கடனை தாம் அடைத்து விட்டதாக கூறுகிறார்.

 அந்த ஏழை பெண்ணோ மகிழ்ச்சியில் ஜசாக்கல்லாஹு ஹைரன் என்று கூறிவிட்டு நீங்கள் யார் என்று கேட்கிறார்.

 நான் யார் என்பதை நீங்கள் மறுமையில் பார்த்துக்கொள்ளுங்கள். நாம் சதக்கா செய்வதற்கு இதுவும் ஓர் அழகிய வழிமுறை, நாம் யாருக்கு உதவி செய்கிறோமோ நம்மை பற்றிய அடையாளம் தெரியாமல் அவருக்கு உதவி செய்வது அழகிய வழிமுறை, நீங்கள் எனக்காகவும், என் குடும்பத்தினருக்காகவும் மறுமை வாழ்க்கைக்கு துஆ செய்தாலே போதுமானது என்கிறார்.

அழகிய முன்மாதிரி சொல்லப்பட்டுள்ளது. உங்கள் ஊரில் நீங்களும் பண்ணலாமே.

- தொகுப்பு: பெளசூனா இஸ்ஸதீன் - 
சவூதியில் நெகிழ வைத்த சம்பவம்.... உங்கள் ஊரில் நீங்களும் பண்ணலாமே. சவூதியில் நெகிழ வைத்த சம்பவம்.... உங்கள் ஊரில் நீங்களும் பண்ணலாமே. Reviewed by Madawala News on 12/18/2017 10:45:00 PM Rating: 5