Yahya

பதுளை அல் ஹிக்மா ஆரம்பப் பாடசாலைக்கு தனிப்பட்ட சொந்த நிதியிலிருந்தாவது காணியைப் பெற்றுத் தருவேன்.


பதுளுப்பிட்டிய உள்ளிட்ட பதுளை பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மென்மேலும் முன்னெடுத்துச் செல்ல நாம் திட்டமிட்டிருக்கிறோம்.

அதற்கு இன்னுமின்னும் எமக்கு பெரும் ஆட்சிபலம் வேண்டும். அப்போதுதான் எம்மால் வெற்றிகரமாக அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

பதுளை அல் ஹிக்மா ஆரம்பப் பாடசாலைக்கான காணித் தேவைக்காக என்னால் முடிந்தளவு முயற்சி செய்வேன். அப்படி அல்லாத பட்சத்தில் தனிப் பட்ட முறையிலாவது காணியைப் பெற்றுத் தருவேன் என
தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்னாந்து தெரிவித்தார்.


பதுஞப்பிட்டிய ஐ.தே.க. அலுவலகத்தில் சனிக்கிழமை (24) இரவு இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,

பதுளுப்பிட்டிய பிரதேசம் சிங்களம், தமிழ், முஸ்லிம்கள் செறிந்து வாழுகின்ற சமத்துவம், சகோதரத் துவம், இன, மத, பிரதேச வேறு பாடின்றி ஐக்கியமாக இருக்கின்றதொரு பிரதேசம்.

 இங்கும் பல தேவைகள் இருக்கின்றன.

எனக்குக் கிடைத்திருக்கும் அமைச்சுப் பதவியால் மாவட்டத் திலும், பிரதேசத்திலும் பெரிதாக சேவைகள் செய்ய முடியாவிட்டா லும் முடிந்தளவு மக்களுக்கான பணிகளை நான் செய்திருக்கிறேன். என்னில் இன்னும் குறைபாடுகள் இருக்கின்றன.

அந்த தவறை, பிழையை நான் உணர்கின்றேன். அபிவிருத்திப் பணிக் காக ஒதுக்கப்படுகின்ற நிதி மாகாண சபை மூலம் பகிர்ந்தளிக்கப்படுகின்றன.

நாமும் ஆட்சியில் அதிகாரம் செலுத்த வேண்டும். ஆட்சிபலம் பொருந்தியவர்களாக ஆக வேண்டும். நாம் தோற்றுப் போய் விடக்கூடாது.

நான் மேலதிக அதிகப்படியான வாக்குகளால் வென்றிருக்கிறேன். பதுளை மாநகர சபையை வென்றெடுக்க பதுளுப்பிட்டிய ஆதரவா ளர்களான நீங்களும் உதவிபுரிய வேண்டும்.

எமது கட்சியும், ஆட்சி யும் பலம் மிக்கதாக அமைந்தால் இன்னுமின்னும் அபிவிருத்தி செயற்திட்டங்களை நாம் வெற் றிகரமாக முன்கொண்டு செல்ல முடியும்.

 நான் ஊவா முதல்வராக இருந்த சமயத்தில் பதுளை அல் அதான் மகா வித்தியாலயத்தின் புதிய மாடிக் கட்டடத் திற்கு அடிக்கல் நாட்டி வைத்தோம். தற்போது அது வேறொரு சாராரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அல் ஹிக்மா ஆரம்ப பாடசா லையின் முக்கிய காணித் தேவையையும் நாம் அறிவோம். அதற்காக முயற்சி செய்வோம். அப்படி முடி யாவிட்டால் எனது தனிப்பட்ட் சொந்த நிதியிலிருந்தாவது அதற் கான காணியை நான் கட்டாயம் பெற்றுத் தருவேன் என உறுதியளிக்கிறேன் என்றார்.

பதுளை அல் ஹிக்மா ஆரம்பப் பாடசாலைக்கு தனிப்பட்ட சொந்த நிதியிலிருந்தாவது காணியைப் பெற்றுத் தருவேன். பதுளை அல் ஹிக்மா ஆரம்பப் பாடசாலைக்கு தனிப்பட்ட சொந்த நிதியிலிருந்தாவது காணியைப் பெற்றுத் தருவேன். Reviewed by Madawala News on 12/26/2017 12:35:00 PM Rating: 5