Kidny

Kidny

கிந்தோட்டை வன்முறை .. கைது செய்யபட்ட 22 பேர் மீதும் ICCPR சர்வதேச சட்டம் பாய்ந்தது.


-ஹஸன் இக்பால்-

கிந்தோட்டை வன்முறை தொடர்பில் கைது செய்யப்பட் டுள்ள 22 சந்தேக நபர்களும்
2007 (No 56) சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சட்டம்  (ICCPR Act) இன் கீழ் குற்றம்  சாட்டப்பட்டுள்ளனர்.

சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபி விருத்தி அமைச்சானது, மேற்குறித்த சட்டத்தின் அமுலாக்கல் தொடர்பில் அதி காரமளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.


பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறுகையில், காலி மாஜிஸ் திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 22 சந்தேகநபர்களும் டிசம்பர் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்ப டுவர் என தெரிவித்துள்ளார்.


சந்தேக நபர் களில் மூவர் நவம்பர் 16 ஆம் திகதியும், ஏனையோர் நவம்பர் 17 ஆம் திகதியும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களுள் முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினரும் உள்ளடங்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட் டுள்ள சந்தேக நபர்களுக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிணை வழங்க அதிகாரம் பெற்றுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், உயர் நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டால் மாத்திரமே பினை பெற்றுக் கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித் துள்ளார்.


இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பிணை வழங்கப்படுவதற்கு மிக அரிதான வாய்ப்புக்களே இருப்பதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்து வருடம் வரையில் சிறைத் தண்டனை விதிக்கப் படலாம்.

கிந்தோட்ட வன்முறையில் 18 வர்த்தக நிலையங்களும், 85 இருப்பிடங்களும், 16 வாகனங்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 8 கொள்ளைச் சம்பவங்களும் இதன்போது இடம்பெற்றுள்ளன.
Image result for gintota
-ஹஸன் இக்பால் (விடிவெள்ளி)
கிந்தோட்டை வன்முறை .. கைது செய்யபட்ட 22 பேர் மீதும் ICCPR சர்வதேச சட்டம் பாய்ந்தது. கிந்தோட்டை வன்முறை .. கைது செய்யபட்ட 22 பேர் மீதும் ICCPR  சர்வதேச சட்டம் பாய்ந்தது. Reviewed by Madawala News on 12/05/2017 09:57:00 AM Rating: 5