Yahya

பேருவளையில் முஸ்லிம்களின் வாக்குகளை சூறையாட மகிந்த அணியினர் முயற்சி.


நல்லாட்சி அரசாங்கத்தின் பூரண பங்களிப்புடன் பேருவளை நகர சபை மற்றும் பிரதேச சபை பகுதிகளை துரிதமாக
அபிவிருத்தி செய்து மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுப்போம்.

இப்பணியை மேற்கொள்ள ஐந்து வருட செயற் திட்டமொன்றை நடைமுறைப்ப டுத்துவேன் என மேல் மாகாண சபை உறுப்பினர் இப்திகார் ஜெமீல் கூறினார்.


பேருவளை நகர சபைத் தேர்தலில் ஐ. தே. முன்னணி வேட்பாளர்கள், ஐ. தே. கட்சிக் கிளை முக்கியஸ்தர் கள், பிரமுகர்கள் , ஆதரவாளர்கள் பங்குபற்றிய விசேட கூட்டமொன்று (20) சீனன்கோட்டையில் நடை பெற்றது.

இக் கூட்டத்தில் பேசும் போது அவர் மேற்கண்டவாறு குறிப் பிட்டார்.

இப்திகார் ஜெமீல் மேலும் கூறிய தாவது ,

பேருவளை நகர சபைக்கு ஊழல், இலஞ்சம் இன்றி மக்களுக்கு சிறப்பான சேவை செய்யக்கூடிய வேட்பாளர்களையே நாம் ஐ. தே. முன்னணி சார்பில் களமிறக்கியுள் ளோம். எமது கட்சி சார்பில் போட்டியிடுகின்றவர்கள் மக்கள் மனதை வென்றவர்களே.

அதன் காரணமாக எமது கட்சிக்கு வெற்றி உறுதியாகும். என்றாலும் நாம் வரலாறு காணாத பெரு வெற்றியையீட்டி பேருவளை மக்கள் ஐ. தே. கட்சியுடன்தான் இருக்கின்றனர் என்பதனை எமது பிரதமருக்கு காட்ட வேண்டும்.


பேருவளை நகரசபையின் தேர்தல் முடிவானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் ஒரு அரசியல் பாடமா அமையும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. சுயேச்சை குழுவை களமிறக்கி மாறுவேடத்தில் பேருவளை முஸ் லிம்களின் வாக்குகளை சூறையாட எடுத்துள்ள முயற்சி குறித்து முழு நாட்டு முஸ்லிம்களும் அதிர்ச்சிய டைந்துள்ளனர்.

 பேருவளை முஸ் லிம்கள் இதை சரியாகப் புரிந்து கொண்டு நடைபெறவுள்ள தேர் தலில் புத்திசாலித்தனமாக வாக்க ளிக்க வேண்டும்.

பேருவளை நகரசபைத் தேர்த லில் சுயேச்சை குழுவில் போட் டியிடும் வேட்பாளர் பட்டியலில் மஹிந்த ராஜபக்ஷ அதரவாளர்களும் இணைந்து போட்டியிடுவதனாலும் முன்னாள் நகர பிதாக்கள் முழுமை
யான ஆதரவு வழங்குவதானாலும் மக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட் டுள்ளது.

பேருவளை பிரதேச சபையில் பொதுஜன பெரமுன போட்டியிடும் அதே சமயம் நகர சபைத் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என்றார்.

பேருவளையில் முஸ்லிம்களின் வாக்குகளை சூறையாட மகிந்த அணியினர் முயற்சி. பேருவளையில் முஸ்லிம்களின் வாக்குகளை சூறையாட மகிந்த அணியினர் முயற்சி. Reviewed by Madawala News on 12/23/2017 02:40:00 PM Rating: 5