Yahya

மடவலையில் ''மானுடம் தழைத்தோங்க மாண்புகள் காத்திடுவோம்'' இஜ்திமா.


இஜ்திமா - 2017
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி வருடா வருடம் சமூகத்திற்கு தேவை என்று உணரும்
விடயங்களை இஜ்திஹாத் அடிப்படையில் தீர்மானித்து சமூகத்தின் சகல மட்டங்களிலுமுள்ள புத்தி ஜீவிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுடன் நாடளாவிய ரீதியாக இஜ்திமாக்கள், கருத்தரங்குகள் மற்றும் விழிப்புணர்வு மாநாடுகள் என்ற அடிப்படையில் மக்களை அறிவூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது அல்ஹம்துலில்லாஹ்.

இந்த அடிப்படையில் 2017ம் ஆண்டிற்கான தலைப்பாக *'மானுடம் தழைத்தோங்க மாண்புகள் காத்திடுவோம்'* எனும் கருப்பொருளின் படி நாடலாவிய ரீதியில் பல இஜ்திமாக்கள், கருத்தரங்குகள் மற்றும் விழிப்புணர்வு மாநாடுகளை வெற்றிகரமாக நடாத்தி முடித்துள்ளது.

இந்த வரிசையில் இறுதி நிகழ்வாக கண்டி-மடவளையில் இன்ஷா அல்லாஹ் *இம்மாதம் 24ம் திகதி ஞாயிற்றுக் கிழமை* (24.12.2017) *அஷ்ரப் கேட்போர் கூடத்தில்* *காலை 8.30 மணிமுதல் பெண்களுக்கும் மாலை 4.00 மணி முதல் ஆண்களுக்கும்* என தனித்தனியான இரண்டு நிகழ்வுகளாக நடாத்தப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் *அமீர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்* அவர்களும் விஷேட பேச்சாளராக கலந்துகொள்ளவுள்ள இவ்விஜ்திமாவானது ஈமான் கொண்ட முஸ்லீம்களின் பண்புகள் மற்றும் அடிப்படைகளை வழியுறுத்தி பின்வரும் மூன்று உபதலைப்புகளை மிகச்சிறந்த வளவாளர்கள் மூவரைக்கொண்டு  நடாத்த திட்டமிட்டுள்ளது.

*1. உள்ளங்கள் உயிர்பெறட்டும்* (ஈமானின் அவசியமும் பண்புகளும்)
*2. உறவுகள் மலரட்டும்* (ஈமானின் வெளிப்பாடும் அதன் சமூகத்தாக்கங்களும்)
*3. சமூகமாக வாழ்வதே சுமூகத்திற்கான வழி* (சமூக வாழ்வின் அடிப்படையும் அவசியமும்)

இன்றைய *நாட்டின் நிலமைகளை உணர்ந்து அதற்கேற்றவாறு நாம் எவ்வாறு ஸாலிஹான பிரஜைகளாக நம் வீட்டிற்கும் ஊரிற்கும் நாட்டிற்கும் முன்மாதிரிகளாக வாழப்போகின்றோம்* என்பது பற்றிய அறிவூட்டலாகவே இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
எனவே காலத்தின் தேவை மற்றும் அவசியம் உணர்ந்து ஆண்-பெண்கள் இருபாலரும் கலந்து பயன்பெறுமாறு அன்பாய் அழைக்கின்றோம்.
*எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலா நமது முயற்சிகளை அங்கீகரித்து மீஸானுல் ஹஸனாத்தில் சேர்த்துவிடுவானாக.*

ஏற்பாட்டுக்குழு-
மடவலையில் ''மானுடம் தழைத்தோங்க மாண்புகள் காத்திடுவோம்'' இஜ்திமா. மடவலையில் ''மானுடம் தழைத்தோங்க மாண்புகள் காத்திடுவோம்'' இஜ்திமா. Reviewed by Madawala News on 12/21/2017 07:59:00 PM Rating: 5