Kidny

Kidny

மாவனல்லையைச் சேர்ந்த சகோதரர் இம்ரானின் சிறுநீரக சத்திர சிகிச்சைக்கு உதவுங்கள்.


கிருங்கனிய ஜமாஅத்தைச் சேர்ந்தவரும்  தற்போது  D/9 வராவல கண்ணத்தோட்டை
என்ற முகவரியை  வசிப்பிடமாகவும் கொண்ட ஜனாப் A.R.M இம்ரான் ( வயது 46)  என்பவர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு உடனடியாக சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு உடபடுத்தப்படல் வேண்டுமென அவரது வைத்தியர் A.L.M நஸார் அவர்கள் அறிவுருத்தியுள்ளார். இந்த சத்திர சிகிச்சை மற்றும் அதன் பின்னரான செலவுகளுக்காக சுமார் 30 இலட்சம் ரூபாய்கள் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.


மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியின் பழைய மாணவரான ஜனாப்  இம்ரான் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். இவரின் மூத்த மகள்  பர்ஹா 7 ஆம் வகுப்பிலும் இரண்டாவது மகன் பாதீன் 5ஆம் வகுப்பிலும் கல்வி கற்கின்றனர். இவரின் மூன்றாவது மகள் ரஹ்மா 4 மாதங்கள் பூர்த்தியடைந்த சிறு குழந்தையாவார்.


ஓரு முச்சக்கர வண்டி ஓட்டுணரான நடுத்தரக் குடும்பத்தைச் சோந்த ஜனாப் இம்ரான் தனது சத்திரசிகிச்சைக்கு தேவையான நிதியினை திரட்டிக் கொள்வதற்காக பொதுமக்கள்  நலன் விரும்பிகளின் உதவியை நாடியுள்ளார்.


சகோதரர் இம்ரான் இற்கு O+ வகையான சிறுநீரகம் தேவைப்படுகின்றது. சிறுநீரகம் கொடுக்க விரும்புபவர்கள் பின்வரும் இலக்கத்துடன்  0094 76 7310101 (WhatsApp) தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Rifan Hussain
மாவனல்லையைச் சேர்ந்த சகோதரர் இம்ரானின் சிறுநீரக சத்திர சிகிச்சைக்கு உதவுங்கள். மாவனல்லையைச் சேர்ந்த சகோதரர் இம்ரானின் சிறுநீரக சத்திர சிகிச்சைக்கு உதவுங்கள். Reviewed by Madawala News on 12/03/2017 02:01:00 PM Rating: 5