Yahya

திருமணத்திற்கு முன்னர் பாலியல் உறவு வைத்துக்கொள்ளலாம். அனுமதியை நீடித்தது இந்தோனேசியா நீதிமன்றம்.


திருமணத்திற்கு முன்னர்  பாலியல் உறவு வைத்துக்கொள்வதை தடுக்க வேண்டுமென கோரப்பட்ட மனுவை இந்தோனேசியா நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்தோனேசியாவின் அரசியலமைப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை இந்த மனுவை நிராகரித்துள்ளது.

இந்த மனு விசாரணையில் கலந்துகொண்ட ஒன்பது நீதிபதிகளில் ஐந்து பேர் இந்த மனுவுக்கு எதிராக வாக்களித்ததுள்ளனர்.

உலகின் அதிகமான முஸ்லிம் சனத்தொகையை கொண்ட இந்தோனேஷியாவில் பெரும்பாலான இந்தோனேஷியர்கள்  மதச்சார்பற்ற ஒரு மிதவாத கொள்கையை கடைபிடிக்கின்றனர்.

இந்த மனு நிராகரிக்கப்பட்டமையை தொடர்ந்து இந்தோனேசியாவில் ஏற்கனவே திருமணத்திற்கு முன்னர் பாலியல் உறவு வைத்துக்கொள்வதற்கான அனுமதி அப்படியே அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
திருமணத்திற்கு முன்னர் பாலியல் உறவு வைத்துக்கொள்ளலாம். அனுமதியை நீடித்தது இந்தோனேசியா நீதிமன்றம். திருமணத்திற்கு முன்னர்  பாலியல் உறவு வைத்துக்கொள்ளலாம். அனுமதியை நீடித்தது இந்தோனேசியா நீதிமன்றம். Reviewed by Madawala News on 12/14/2017 03:05:00 PM Rating: 5