Yahya

திருகோணமலை, தம்பலகமத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் எஸ்.எம்.இக்பால் உயிரிழப்பு.


(ஹஸ்பர் ஏ ஹலீம்)
திருகோணமலை தம்பலகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பலகமம் ஜெயபுரம் பகுதியின்
ஆடைத்தொழிற்சாலைக்கு முன் நேற்றிரவு(29)  இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகம பொலிஸார் தெரிவித்தனர்.


கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பெற்றோல் பவுசருடன்  மோட்டார் சைக்கில் மோதுண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவூம் ஒருவர் பலத்த காயங்களுடன் திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தம்பலகம பொலிஸார் தெரிவித்தனர்.


மோட்டார் சைக்கிளில் இருவர் பயணம் செய்தலில் சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மொறேவவ பகுதியில் இருந்து தங்களது தொழில் நிமித்தம் வீடு செல்லும் வழியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமையும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


பெற்றோல் பவுசரை முந்திச் செல்ல முற்பட்டபோதே இவ்விபத்து இடம்பெற்றதாக ஆரம்பகட்டவிசாரனையின்போது தெரியவருகிறதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கிண்ணியா மணியரசங்குளப் பகுதியைச் சேர்ந்த வயது(56) எஸ்.எம்.இக்பால் எனவும் ஆறு பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பெற்றோல் பவுசர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் எனவும்  உயிரிழந்தவரின் ஜனாஸா  கந்தளாய் வைத்தியசாலையில் பிரேரபரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரனைகளை தம்பலகாம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருகோணமலை, தம்பலகமத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் எஸ்.எம்.இக்பால் உயிரிழப்பு. திருகோணமலை, தம்பலகமத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் எஸ்.எம்.இக்பால் உயிரிழப்பு. Reviewed by Madawala News on 12/30/2017 11:35:00 AM Rating: 5